மேலும் அறிய

தஞ்சாவூருக்கு மீண்டும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில் வருகை! கொல்லம், சபரிமலை பக்தர்களுக்கு மீண்டும் நேரடி இணைப்பு!

தஞ்சையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு கிடைத்து வந்த நேரடி ரயில் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சைக்கு வந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மீட்டர் கேஜ் இருப்புப் பாதை இருந்த காலத்தில் நாகூரில் இருந்து தஞ்சாவூர் மதுரை செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு தினமும் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அகல ரயில் பாதை பணிகளுக்காக மாற்று தடத்தில் இயக்கப்பட்ட அந்த ரயில் பின்னர் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் இயக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதிகளவில் தஞ்சாவூர் பயணிகள் பயன்பெற்று வந்தனர்.

மதுரை, செங்கோட்டை செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட நிலையில் இந்த ரயில் நிறுத்தப்பட்டதால் தஞ்சையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு கிடைத்து வந்த நேரடி ரயில் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இது வர்த்தகர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மிகவும் உபயோகமாக இருந்து வந்தது. இந்நிலையில் தஞ்சை வழியாக முன்பு இயங்கிய நாகூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை மதுரை தஞ்சை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணிகள் பயன்பாடு மிகுந்து காணப்பட்டது. இதனால் தொடர்ந்து நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வந்தனர். கேரளப் பகுதியைச் சார்ந்த மாவேலிக்கரா மற்றும் கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர்  கருப்பு முருகானந்தம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மூலம் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே மதுரை தஞ்சை வழியாக நிரந்தர ரயில் இயக்க கோரிக்கை விடுத்தார். அதையடுத்து கடந்த வாரம் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர ரயிலை தஞ்சை வழியாக இயக்க தென்னக ரயில்வே அனுப்பிய பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இந்த ரயில் நேற்று புதன்கிழமை இரவு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு இன்று வியாழக்கிழமை மதியம் 2.45 மணிக்கு தஞ்சாவூர் வந்தடைந்தது. இந்த புதிய ரயிலுக்கு தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயிலை இயக்கி வந்த டிரைவர்கள் ரஸல், ரகுபாண்டி மற்றும் ரயில் மேலாளர் (கார்டு) ராஜேஷ்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர். பயணிகளுக்கு ரயில்வே விழிப்புணர்வு, ரயிலின் கால அட்டவணை மற்றும் இனிப்பு அடங்கிய வாழ்த்து அட்டைகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவர் எம்.மாறன், செயலாளர் ஏ.கிரி, இணைச் செயலாளர்கள் பாபநாசம் டி.சரவணன், ஸ்ரீதரன் பொருளாளர் நடராஜ் குமார், செயற்குழு உறுப்பினர் தீபக்வசந்த், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில் தஞ்சாவூரில் இருந்து பல வருடங்களுக்குப் பிறகு கேரள மாநிலம் புனலூர் கொல்லம் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் நேரடி இணைப்பை  கொடுக்கிறது. மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மிக வசதியாக அமையும். பயணிகள் பயன்பாட்டை பொருத்து இந்த  ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
Embed widget