மேலும் அறிய

வறுமையும் ஒழியும்... பெரிய கோயில் நந்தா விளக்கும் எரியும்: மாமன்னன் ராஜராஜசோழனின் தொலைநோக்கு பார்வை திட்டம்

தங்கள் மக்கள் மீதும் மாமன்னன் ராஜராஜ சோழன் வைத்திருந்த அக்கறையின் ஒரு திட்டம்தான் வறுமை ஒழிப்பு திட்டம். இதில் முக்கிய இடம் பிடித்தது சாவா மூவா பேராடுகள் திட்டம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் என்றாலே பிரமாண்டம்தான். அதிலும் மாமன்னன் ராஜராஜ சோழன் என்றால் உலகமே வியக்கும். கடல் கடந்து சென்று போர் தொடுத்து பெற்ற வெற்றிகள் ஏராளம். அதேபோல் தங்கள் மக்கள் மீதும் மாமன்னன் ராஜராஜ சோழன் வைத்திருந்த அக்கறையின் ஒரு திட்டம்தான் வறுமை ஒழிப்பு திட்டம். இதில் முக்கிய இடம் பிடித்தது சாவா மூவா பேராடுகள் திட்டம்.

கட்டிடக்கலை, போர்த்திறன் மட்டுமின்றி நிர்வாகத்திறனிலும் அசாத்தியன் திறன் பெற்றவர்தான் ராஜராஜ சோழன். அவ்வாறு அவர் மக்கள் மீது கொண்ட அக்கறையில் கொண்டு வந்த திட்டம்தான் சாவா மூவா பேராடுகள் திட்டம். என்னங்க இது என்கிறீர்களா? ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் ராஜராஜ சோழன் கொண்டு வந்த அற்புதமான திட்டம்தான் இது. சரிங்க அதுக்கு முன்னாடி நந்தா விளக்கு பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம். ஏன்னா சாவா மூவா பேராடுகள் திட்டத்திற்கு நந்தா விளக்குகள்தான் அஸ்திவாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வறுமையும் ஒழியும்... பெரிய கோயில் நந்தா விளக்கும் எரியும்: மாமன்னன் ராஜராஜசோழனின் தொலைநோக்கு பார்வை திட்டம்

நந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும், பகலும் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு, திருநுந்தா விளக்கு, நொந்தா விளக்கு, தூண்டாமணி விளக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளன. சாவா மூவா பேராடுகள் என்றால் சாவினாலோ, மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள்.

முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிதான் சாவா மூவா பேராடுகள் திட்டம் உருவாக வழிவகுத்தது. தஞ்சை பெரிய கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் உள்ள சோழர்கள் காலக் கல்வெட்டுகளில் நந்தா விளக்கு பற்றிய தகவல்கள் உள்ளன.

தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த செல்வ செழிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மனக்கவலை. சொத்துக்கள், பணம் என்று செல்வ செழிப்பு இருந்தாலும் மனக்கவலையால் வாடினார். தன் பிரச்னை தீர்ந்தால், தான் தினமும் சென்று வழிபடும் தஞ்சை பெரிய கோயிலில் நந்தா விளக்கு ஏற்ற நிதி அளிப்பதாக வேண்டிக் கொண்டார். சில மாதங்களில் அவர் பிரச்னை நீங்கியது. வேண்டுதலை நிறைவேற்ற கோயில் அலுவலரைச் சந்தித்தார். அப்போது தனது வேண்டுதலைச் கூறி பத்தாயிரம் பொற்காசுகள் கொடுக்க இந்தத் தகவல் மன்னன் ராஜராஜ சோழன் கவனத்துக்குச் செல்கிறது. அந்தச் செல்வந்த பெண்மணியிடமிருந்து பொற்காசுகளைக் கோயில் சார்பில் ராஜராஜ சோழனே பெற்றுக்கொண்டார்.

அடுத்த நொடியே அமைச்சரை அழைத்து, ‘இந்த ஊரில் மிகவும் வறுமையில் வாடும் நபர் இருந்தால் அழைத்து வாருங்கள்’ என்று கட்டளையிட்டார். மன்னர் இட்ட கட்டளையாயிற்றே... தேடி பிடித்து அந்த ஊரில் வறுமையில் வாடிய ஒருவரை அரசர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். உடன் பொற்காசுகள் மூட்டை ஒன்றை வறுமையில் வாடியவருக்கு ராஜராஜ சோழன் கொடுப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதுதான் இல்லை. நடந்ததே வேறு.

கோயில் அலுவலரை அழைத்த அரசர், ‘‘தினமும் உண்ணாழிகையில் விளக்கெரிக்க, எவ்வளவு நெய் தேவை’’ என்றார். ‘‘ஒரு ஆழாக்குத் தேவைப்படும்’’ என்றார் அலுவலர். அடுத்து, கால்நடை வளர்ப்பில் அனுபவம் கொண்ட அமைச்சர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு, ‘‘செல்வந்த பெண்மணி கொடுத்த கோயில் நிதியிலிருந்து வறுமையில் வாடும் அந்த மனிதருக்கு 96 ஆடுகளை வாங்கிக் கொடுங்கள். அதில் கிடா, பெட்டை, குட்டிகளும் இருக்க வேண்டும். இந்த ஆடுகளின் பால்மூலம் கிடைக்கும் நெய்யைத் தினமும் ஒரு ஆழாக்கு கோயிலுக்குக் கொடுத்துவிட வேண்டும். இந்த 96 ஆடுகளும் சில ஆண்டுகளில் பல்கிப் பெருகிவிடும்.

அதற்குள் இவர் வறுமை நீங்கி வளம் பெற்றுவிடுவார். இவர் மீண்டும் 96 ஆடுகளைக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும். அவை மற்றொருவருக்கு வழங்கப்படும். அந்த ஆடுகளைப் பெற்றுக் கொண்டவர் கோயிலுக்கு நெய் கொடுக்க வேண்டும். இவர் வளர்ச்சி அடைந்தவுடன் வேறு ஒருவருக்கு, அடுத்து மற்றொருவருக்கு என இந்தத் திட்டம் விரியட்டும். இதன் மூலம் நாட்டில் வறுமையில் வாடுபவர்களே இல்லாத நிலை உருவாக வேண்டும். உருவாகும் என ராஜராஜ சோழன் அறிவித்த போது அமைச்சர்கள் வியப்படைந்தனர். எத்தகைய தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டம். கோயிலிலும் விளக்கெரியும். வறுமையும் ஒழியும் அல்லவா?

இது ஆதாரம் இல்லாமல் சொல்லப்பட்ட தகவல் அல்ல. சாவா மூவா பேராடுகள் குறித்து ஏராளமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேராடுகள் திட்டம் போலவே, பெரும் பசுக்கள் திட்டமும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது. ‘‘தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் என்னும் ராஜராஜேஸ்வரத்தை எழுப்பிய முதலாம் ராஜராஜசோழன் அக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான திருவிளக்குகள் எரிய ஆட்டுப் பண்ணைகளையும், பசுப் பண்ணைகளையும், எருமைப் பண்ணைகளையும் நிரந்தர முதலீடாகப் பல்வேறு ஊர்களில் அமைத்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வுக்கு வழி செய்ததோடு, அவ்விளக்குகள் எரிய தேவைப்படும் நெய்யை மட்டும் அப்பண்ணையைப் பராமரிப்பவர்கள் அளிக்க வகையும் செய்தார்.

தான் அளித்த ஆவினங்களின் எண்ணிக்கை, அந்தப் பண்ணையில் என்றென்றும் குறையக் கூடாது. நோய் காரணமாகவோ, முதுமையின் காரணமாகவோ ஆடு அல்லது பசு இறந்து போகுமானால், அதற்குப் பதிலாக இன்னோர் ஆட்டையோ பசுவையோ பண்ணையைப் பராமரிப்பவர்கள் ஈடு செய்ய வேண்டும். இந்த எண்ணிக்கையை அவ்வப்போது அரசு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து அறிக்கையை அரசனுக்குச் சமர்ப்பிப்பார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட பண்ணைகள் சந்திரன், சூரியன் உள்ளளவும் அழியாமல் செயல்பட வேண்டும் என்பதே ராஜராஜசோழனின் நோக்கம்.

இதற்காக அளிக்கப்பட்ட ஆடுகளையும், பசுக்களையும் சாவா மூவா பேராடுகள் என்றும், சாவா மூவா பெரும் பசுக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். தஞ்சைக் கோயிலில் அவர் வைத்த ஒரு விளக்குக்காகப் பலன் தரும் 48 பசுக்களைச் சிறுகுளத்தூரில் இருந்த புளியன் சூற்றி என்பவரிடம் ஒப்படைத்தான் என்று தஞ்சைக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

ராஜராஜ சோழன் மூலம் உருவாக்கப்பட்ட இந்தச் சாவா மூவா பேராடுகள் பெரும் பசுக்கள் திட்டம் ராஜேந்திர சோழன் காலத்தில் அவர் ஆட்சிப் பகுதி முழுக்கச் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு நாயக்கர் ஆட்சி, மராட்டியர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி என மாறி மாறி வந்தபோதும், தஞ்சைப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு மட்டும் நெய் வழங்க கால்நடைகள் வளர்க்கும் திட்டம் செயல்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் மாட்டு சாணத்தை இயற்கை உரமாக்கி அசத்தல்
தஞ்சையில் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் மாட்டு சாணத்தை இயற்கை உரமாக்கி அசத்தல்
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கணும்...இல்லைன்னா கடும் நடவடிக்கை
வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கணும்...இல்லைன்னா கடும் நடவடிக்கை
தஞ்சாவூர் தேர்தல் களம் சூடுபிடிக்குது! 28 பேர் வேட்புமனு தாக்கல்: பாஜக வேட்பாளர் யார்?
தஞ்சாவூர் தேர்தல் களம் சூடுபிடிக்குது! 28 பேர் வேட்புமனு தாக்கல்: பாஜக வேட்பாளர் யார்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
Iran Strikes Israel: பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு
பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு
GOLD SILVER RATE Today: என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
Top 10 News Headlines: தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Best Selling Car: SUVக்களால கூட தொட முடியலை - மாருதியோட செடான் கார்ல அப்படி என்ன தான் இருக்கு - NO.1 எப்படி?
Best Selling Car: SUVக்களால கூட தொட முடியலை - மாருதியோட செடான் கார்ல அப்படி என்ன தான் இருக்கு - NO.1 எப்படி?
Trump Iran War Video: “இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்
“இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்
Embed widget