மேலும் அறிய

விலை குறைஞ்சும் விற்பனை மந்தம்தானே? வியாபாரிகள் கவலை எதற்காக?

வெளிநாட்டிற்கு அனுப்பும் முட்டையின் ஏற்றுமதி குறைந்ததாலும், முட்டை உற்பத்தி அதிகரித்ததாலும் விலை குறைந்துள்ளது. இருப்பினும் தஞ்சையில் விற்பனை மந்தமாக உள்ளது.

தஞ்சாவூர்: ஒரு ரூபாய்தான் குறைஞ்சிருக்கா என்று பொதுமக்கள் கேட்கிறாங்க. எதை பற்றி தெரியுங்களா? அப்படியே விலை குறைந்தாலும் விற்பனை மந்தமாகதானே இருக்கு என்கிறார் வியாபாரிகள். எதற்காக தெரியுங்களா?

தஞ்சையில் முட்டை விலை கடந்த ஒரு மாதத்தில் ரூ.1 குறைந்துள்ளது.   தற்போது ஒரு முட்டை ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சைக்கு நாமக்கல் மற்றும் கந்தர்வக்கோட்டையில் உள்ள பண்ணைகளில் இருந்து தினமும் முட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது

வழக்கமாக தஞ்சைக்கு ஒரு நாளைக்கு 3 லட்சம் வரையிலான முட்டைகள் லாரிகளில் எடுத்து வரப்படும். கடந்த மாதம் ரூ.5.90 இருந்த முட்டை கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து தற்போது ரூ.4.80 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டது. சில்லறை கடைகளில் கடந்த மாதம் ஒரு முட்டை ரூ.7க்கு விற்பனையானது. தற்போது கொள்முதல் விலை குறைந்து விட்டதால் ரூ.6க்கு விற்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் ரூ.1 மட்டுமே விலை குறைந்துள்ளது. முட்டை மொத்த விற்பனை கடைகளில் நேற்று ஒரு முட்டை ரூ.4.80 என விலை நிர்ணயிக்கப்பட்டு, 30 முட்டைகள் கொண்ட ஒரு அட்டை ரூ.144க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து தஞ்சை முட்டை மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே முட்டை கொள்முதல் விலை குறைந்தபடியே உள்ளது. வெளிநாட்டிற்கு அனுப்பும் முட்டையின் ஏற்றுமதி குறைந்ததாலும், முட்டை உற்பத்தி அதிகரித்ததாலும் விலை குறைந்துள்ளது. இருப்பினும் தஞ்சையில் விற்பனை மந்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வளரும் குழந்தைகளுக்கு முட்டையை பச்சையாகக் கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்றும், பூப்படைந்த பெண்களுக்கு 'பச்சை முட்டை' தருவது நல்லது என்றும் கூறுகிறார்கள். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் குறைவு.

மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. இதன் மஞ்சள் நிறம் குறிப்பிட்ட பறவை இனம் சாப்பிட்ட உணவில் உள்ள 'கரோட்டினாய்டு', 'ஸாந்தோபில்' எனும் மஞ்சள் நிறமிகளின் அளவை பொறுத்து உருவாகிறது. உதாரணமாக மஞ்சள் நிற மக்காச்சோளத்தை தின்று வளரும் பறவையின் முட்டை, அதிக அடர்த்தியுடன் கூடிய மஞ்சள் கருவைப் பெற்றிருக்கும். மஞ்சள் கருவில் உள்ள நிறமிகளில் 'லூட்டின்' எனும் நிறமிதான் அதிகம். 100 கிராம் கோழி முட்டையில் தண்ணீர் 75 கிராம், கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின்- ஏ, வைட்டமின்-டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட 7 வகை தாதுச்சத்துகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என பல சத்துகள் உள்ளன. 

ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்கு காலை உணவுக்கு தேவையான சக்தி கிடைத்துவிடும் 'முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கும்' என்று ஒரு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, குழந்தைகள், இளம்பெண்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றோர் அதிக சத்தைப் பெறுவதற்காக பச்சை முட்டையை குடிப்பார்கள். இதில்தான் ஆபத்து உள்ளது.

'பச்சை முட்டை'யின் வெள்ளைக்கருவில் 'அவிடின்' எனும் புரதச்சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் வைட்டமினுடன் இணையும்போது, பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்துவிடும். இதன் பலனாக, முட்டையில் உள்ள பயாட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிடின் சத்தைவிட பயாட்டின்தான் நமக்கு முக்கியம். குறிப்பாகக் கூந்தல் வளர்ச்சிக்கு இது தேவை. ஆகவே, வேகவைத்த முட்டையை சாப்பிடுவதே நல்லது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Embed widget