மேலும் அறிய

தஞ்சாவூர் அருகே கிடைத்த ஈமத்தாழிகள்... இன்னொரு கீழடியா? ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கின்றனர்.

பழங்கால தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து, மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்களே ஈமத் தாழிகள் ஆகும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ எனப்படும் பகுதியில் ஈமத் தாழிகள் போன்று காணப்படுகிறது என்று பாளையப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரெ. கமலதாசன் தகவல் அளித்தார். இதன் பேரில் கல்வெட்டு ஆய்வாளர் மன்னர் சரபோசி அரசு கல்லூரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சோ. கண்ணதாசன், பொந்தியாக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் கோ. தில்லைகோவிந்தராசன், வக்கீல் வே. ஜீவக்குமார், பணி நிறைவுப் பெற்ற சரஸ்வதி மகால்நூலக விற்பனை எழுத்தர் மூ. நேரு, முனைவர் பட்ட ஆய்வாளர் பெ.வீரமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் தெற்கு பாளையப்பட்டியில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் அருகே கிடைத்த ஈமத்தாழிகள்... இன்னொரு கீழடியா? ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கின்றனர்.

பின்னர் ஆய்வாளர்கள் தரப்பில் கூறியதாவது; பழங்கால தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து, மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்களே ஈமத் தாழிகள் ஆகும். இது சவ அடக்க முறையாகும். இந்த ஈமத்தாழிகளுக்கு முதுமக்கள் தாழி, முதுமக்கள் சாடி, ஈமப் பேழை, மதமதக்கா பானை என்ற வேறு பெயர்களும் உண்டு. இவ்வடக்க முறை சங்க காலந்தொட்டே இருந்து வருவதைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்னும் சோழ மன்னன் இறந்த போது, ஐயூர் முடவனார் பாடிய பாடல் (புறம் – 228) முதுமக்கள் தாழிப் பற்றிக் குறிப்பிட்டிருக்கக் காணலாம். இவ்வாறே, ‘’தாழியுடன் கவிப்போர்’’என மணிமேகலையும் இவ்வழக்கம் குறித்துச் சுட்டியிருக்கிறது.

அந்த வகையில் சங்க காலத்தைச் சார்ந்த ஈமத் தாழிகள் தெற்குப் பாளையப் பட்டியில், ஈமத்தாழியை ஒட்டி ஓடும் வாரி என்னும் பொருளில் தாழிவாரி என வழங்கப்பட்டுக் காலப்போக்கில் தாழவாரி என மருவி உள்ளது. இப்பகுதியில் 54 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகின்றன. இதுவே சோழ மண்டலத்துள் கிடைக்கப்பெறுகின்ற ஈமக் காடுகளுள் பரப்பளவில் மிகப் பெரிய அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பகுதி மக்கள் பாலை மரங்கள் மிகுந்து காணப்பட்டதால் பாளையப்பட்டியெனப் பெயர் பெற்றதாகக் கூறி வந்தாலும், படைவீர்ர்கள் தங்கியிருக்கும் இடமே பாளையம் எனப்படும். அப்படி தங்கியிருந்த இடத்தில் போர் செய்து இறந்த வீர்ர்களுக்காக, எடுக்கப்பெற்ற ஈமத் தாழிகளாக இருந்திருக்கலாம். இதன்காரணமாகவே இவ்வூரைப் ‘’பாளையப்பட்டி’’என்று அழைத்திருக்கலாம்.

இங்குக் காணப்படும் அகன்ற வாய்களைக் கொண்ட தாழிகளின் கழுத்துப் பகுதியில் சங்கிலி கோர்த்தது போன்ற அழகிய வேலைபாடுகளைக் கொண்டதாக 25க்கும் மேற்பட்ட தாழிகள் மண்ணரிப்பினால் சிதைந்து சிதறுண்டு வெளியே தெரிய வந்துள்ளது. இவற்றுள் இரும்பாலான பொருட்களின் எச்சங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் சிறிய அளவிலான ஈமத் தாழிகள் சிலவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட மண் கலயங்கள் காணப்பெறுவதால், போரில் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்டி, எஞ்சிய சாம்பலைச் சிறிய மண் கலயங்களில் இட்டுப் புதைத்திருக்க வேண்டும் என்பது தெரிய வருகின்றது.
 
மேலும் இவ்வளவு பெரிய அளவிலான ஈமக்காடு இருக்கும் போது, இந்த இடத்தின் அருகிலேயே அம்மக்களின் வாழ்விடப் பகுதியும் இருக்க வேண்டுமே என்ற விசாரித்த போது இவ்வூர்ச் சிவன் கோவில் அருகே மேடான நிலங்களை உழும் போது பானையோடுகள் மேலே வெளிவருகின்றன. அந்த இடம் கூட மக்கள் வாழ்விடப் பகுதியாக இருந்து இருக்கலாம் என்று தகவல்கள் கிடைத்தது.

எனவே இதன் அடிப்படையில் ஈமக் காட்டினையும், வாழ்விடப் பகுதியாகக் கருதப்படும் இடத்தினையும், தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறையோ, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையோ ஆய்வு மேற் கொண்டால், சோழ மண்டலத்துச் சங்க காலத் தொன்மை வரலாற்றையும், அக்கால மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டினையும் வெளிக்கொணரலாம். மேலும் இப்பகுதி மிகுந்த பண்பாட்டுத் தரவுகளைக் கொண்டதாகத் தமிழகத்தில் மற்றொரு கீழடியாக விளங்கிடவும் வாய்ப்புண்டு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
IPS Officer Transfer : ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ சென்னையிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
Bengaluru Power Cut : பெங்களூருவில் சனிக்கிழமையும் பவர் கட்! எத்தனை மணி நேரம் இருக்காது.. முழு விவரம்
Bengaluru Power Cut : பெங்களூருவில் சனிக்கிழமையும் பவர் கட்! எத்தனை மணி நேரம் இருக்காது.. முழு விவரம்
Embed widget