மேலும் அறிய

அதிமுகவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

அதிமுகவை சிலர் அழிக்கவும், முடக்கவும் பார்த்த நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன் அத்தனையும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது

தஞ்சாவூர்: அதிமுகவை சிலர் அழிக்கவும், முடக்கவும் பார்த்த நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன் அத்தனையும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று பெருமிதத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற 65 அடி உயர கொடியேற்று விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கொடியேற்றி அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:

அடுத்து வருகிற தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. இந்த இயக்கத்தைச் சிலர் அழிக்கவும், முடக்கவும் பார்த்த நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன் அத்தனையும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இக்கட்சியில் உழைக்கிற சாதாரண தொண்டர்கள் கூட நிச்சயமாக உச்ச நிலையை அடைவர். அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்ட இயக்கம் அதிமுகதான். எனவே மக்களின் துணையுடன் அதிமுக நிச்சயமாக ஆட்சிக்கு வரும்.  எம்ஜிஆர் விட்டுச் சென்ற பணியை ஜெயலலிதா செய்தார். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை ஜெயலலிதா அரசு செய்தது. இடையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகள் 8 மாதங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஆனால், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் 100 சதவீதமும் நிறைவேற்றிவிட்டதாகத் தமிழக முதல்வர் பொய்யைச் சொல்லி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து வருகிறார். 
முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்வதாக முதல்வர் ஸ்டாலின்  கூறுகிறார். தொழில் முதலீட்டை ஈர்க்க வேண்டுமானால், சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்திருக்கலாம். ஆனால் முதலீட்டை ஈர்ப்பதற்காக அல்லாமல் முதலீடு செய்வதற்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். 

விவசாயத்துக்கு தண்ணீர் முக்கியம். ஆனால் திமுக ஆட்சியில் நீர் ஆதாரத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிகழாண்டு 3 லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் கிடைக்காததால், பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நட்டத்துக்கு ஆளாகினர். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அதிமுக ஆட்சியில் ரூ. 20 ஆயிரம் கொடுக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் ரூ. 13 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 17 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், திமுக அரசு ரூ. 13 ஆயிரத்து 500 மட்டுமே கொடுத்தது. 

மத்திய மற்றும் கர்நாடக அரசுகளிடம் போராடி, வாதாடி நமது பங்கு நீரைப் பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாராளமாக தண்ணீர் கிடைத்து நல்ல விளைச்சலை பெற வேண்டிய விவசாயிகளுக்கு அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இன்றைய அரசு விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

விவசாயத்துக்கு அதிமுக ஆட்சியில் 24 மணிநேரமும் கொடுக்கப்பட்ட மும்முனை மின்சாரமும் இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை. எந்த நேரம் மின்சாரம் தடைபடும் என்ற அச்சத்தில்தான் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் நிலையில் உள்ளனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு  அவர் பேசினார். 

தலைப்பு செய்திகள்

டிஸ்மிஸ் ஆனவர் பணி செய்ததால் பரபரப்பு... தஞ்சை மாவட்ட கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
டிஸ்மிஸ் ஆனவர் பணி செய்ததால் பரபரப்பு... தஞ்சை மாவட்ட கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
அரசாணை எண் 187-ஐ திரும்பப் பெறுங்கள்... வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
அரசாணை எண் 187-ஐ திரும்பப் பெறுங்கள்... வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget