மேலும் அறிய

வைக்கோலுக்குள் மறைந்திருந்த போதை சரக்கு… திருவையாறில் அதிரடி பறிமுதல்

ஆந்திராவிலிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு கடத்தி வரப்படுவதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினருனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஆந்திராவிலிருந்து வைக்கோல்களுக்கு மத்தியில் மறைத்து எடுத்து வரப்பட்ட 440 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போதைப்பொருள் தடுப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திராவிலிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு கடத்தி வரப்படுவதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினருனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவையாறு தேரடி சந்திப்பில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆந்திராவில் இருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த பொலிரோ வாகனத்தை தடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வைக்கோல் கட்டுகளுக்கு மத்தியில் 440 கிலோ கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பண்டல், பண்டலாக மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினர் பொலிரோ சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தில்லைஸ்தானம் கிழக்கு வீதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் விக்னேஷ் (26), திருவையாறு புனல்வாசல் மந்தைக்கரை வீதியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகன் பாண்டியன் (38) என்பதும் தெரியவந்தது. இதில் பாண்டியன் தனது பொலிரோ வாகனத்தில் ஆந்திரா மாநிலம் தடா பகுதியில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து திருவையாறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணை தெரியவந்தது. 

இதையடுத்து மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினர்  440 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களையும், பொலிரோ வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாண்டியன், விக்னேஷ் இருவரையும் திருவையாறு டிஎஸ்பி அருள்மொழி அரசு முன்னிலையில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Embed widget