’பிரதமர் பதவியை தனியாருக்கு விற்றுவிடலாமா’? - மோடியை விமர்சித்து பேனர் வைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது!
மயிலாடுதுறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ஆட்டோவில் பதாகை வைத்தவரை காவல்துறையினர் பதாகையினை அகற்றி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தியிருந்த ஆட்டோ உரிமையாளர் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் ஆட்டோவில் இருந்த பேனரை அகற்றியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 75 ஆண்டுகால சொத்துக்களை விற்று நாசமாக்குவதாகவும், ராணுவம், நீதித்துறை, விண்வெளித்துறை மற்றும் பிரதமர், ஜனாதிபதி பதவிகளை தனியாருக்கு விற்றுவிடலாமா? என்றும், இதனை தேச துரோகம் என விமர்சித்தும், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் வடிவேலு என்பவர் தனது ஆட்டோவில் பேனர் பொருத்தியிருந்தார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த மயிலாடுதுறை பாரதிய ஜனதா கட்சியினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்ற மயிலாடுதுறை காவல் துறையினர், உடனடியாக ஆட்டோ மற்றும் உரிமையாளரை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து அந்த ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த பேனரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். பின்னர் ஆட்டோ உரிமையாளர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடிதம் எழுதி கொடுத்து சென்றார். மயிலாடுதுறையில் இந்திய நாட்டின் பிரதமரை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தப்பட்ட சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், எல்.ஐ.சி உள்ளிட்ட அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி லட்சம் கோடி ரூபாய் நிதியை திரட்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் நீங்க வேண்டி சுடுகாட்டில் சித்தர் நடத்திய பூஜை’ பெண்கள் கலந்து கொண்ட வினோதம்...!
தமிழகத்திலும் தேசிய பணமயமாக்கலுக்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரசின் முடிவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை ஆட்டோவில் வைத்த ஓட்டுநரை கைது செய்துள்ள சம்பவம் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என பலதரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.