மேலும் அறிய

தஞ்சாவூரின் பெருமையை சான்பிரான்சிஸ்கோவில் உயர்த்திய மீனாட்சி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் கேசவமூர்த்தி

இதயவியல் சிகிச்சையில் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தை இது முன்னிலைப்படுத்தியிருப்பதுடன், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரிலுள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.  

தஞ்சாவூர்: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ -ல் நடைபெற்ற டிரான்ஸ்காட் 2025 நிகழ்வில் இறுதிப் போட்டியாளராக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர். பி. கேசவமூர்த்தி தேர்வு பெற்று மிகப்பெரிய பெருமையை தேடித் தந்துள்ளார்.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் இதயவியல் சிகிச்சை துறை தலைவர் டாக்டர். பி. கேசவமூர்த்தி, இந்திய இதயவியலுக்கு பெருமையையும், அங்கீகாரத்தையும் தேடித் தந்திருக்கிறார் என்றால் மிகையில்லை. அமெரிக்காவின் சான்ஃபிராஸ்சிஸ்கோ நகரில், 2025 அக்டோபர் 25 முதல் 28-ம் தேதி வரை டிரான்ஸ்கதீட்டர் கார்டியோவஸ்குலர் தெராபட்டிக்ஸ் (TCT) 2025 மாநாட்டின் ஒரு அங்கமான ‘Cases with the Masters’ என்ற கௌரவம் மிக்க அமர்வு நடந்தது. இதில் தான் சிகிச்சையளித்த புதுமையான நேர்வு குறித்து விளக்கம் அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரே இதயவியல் நிபுணர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் டாக்டர் பி.கேசவமூர்த்தி. 
 
கார்டியோவஸ்குலர் ரீசர்ச் ஃபவுண்டேஷனால் (CRF) நடத்தப்படுகின்ற TCT 2025 மாநாடு, இதய நாள இடையீட்டு மருத்துவ சிகிச்சைப் பிரிவில் உலகின் முதன்மையான கல்விசார் மன்றமாகும்.  தற்போது 37வது ஆண்டாக நடைபெறும் TCT 2025 நிகழ்வானது, இதயநாள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சை செயல்பாடுகளில் நிகழ்ந்திருக்கும் மிக சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்திருக்கிறது. 

‘Cases with the Masters’ அமர்வு என்பது TCT மாநாட்டில் பங்கேற்பாளர்களால் மிகவும் விரும்பி எதிர்பார்க்கப்படும் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாகும்.  இதில் உலகளவில் பிரபல நிபுணர்கள் முன்னிலையில் தங்களுக்கு அதிக சவாலாக இருந்த மற்றும் புதுமையான மருத்துவ சிகிச்சை  நேர்வுகள் குறித்த விளக்கத்தை உலகெங்கிலுமிருந்து வருகின்ற இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணர்கள் சமர்ப்பிக்கின்றனர். உலகளவில் புகழ்பெற்ற இந்த கடுமையான போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ஆசியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மருத்துவ நிபுணராக டாக்டர். கேசவமூர்த்தி தமிழகத்திற்கு மாபெரும் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

கையால் செய்யப்பட்ட கவர்டு ஸ்டென்ட், வகை III கரோனரி தமனி துளைக்கு” (“The Handmade Covered Stent: For Type III Coronary Artery Perforation,”) என்ற தலைப்பிலான அவரது சமர்ப்பிப்பு, அந்த சிகிச்சையில் அவர் பயன்படுத்திய புத்தாக்க உத்தி மற்றும் மருத்துவ துல்லியத்திற்காக நிபுணர்களின் அங்கீகரிப்பை பெற்றிருக்கிறது. நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக, படைப்பாக்கத் திறனுடன் கைவினை செயல்பாட்டால் உருவாக்கப்பட்ட ஸ்டென்ட்டைப் பயன்படுத்தி ஒரு அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதய சிக்கலுக்கு வெற்றிகரமான சிகிச்சையை வழங்கி உள்ளார் டாக்டர் கேசவமூர்த்தி. 

இந்த ஆண்டு, மாநாட்டில் 54 நாடுகளிலிருந்து இதய சிகிச்சைக்கான விளக்கங்கள் குறித்த 912 சமர்ப்பிப்புகள் பெறப்பட்டிருந்தது. இதில் 32 மட்டுமே இறுதிப்போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டன. இவற்றுள் கரோனரி தமனி தொடர்பாக 18, கட்டமைப்பு தொடர்பாக 8 மற்றும் எண்டோவாஸ்குலர் தொடர்பாக 6 சிகிச்சை நேர்வுகள் இடம்பெற்றிருந்தன.  இந்த இறுதிப் போட்டியில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை டாக்டர். கேசவமூர்த்தியின் புதுமையான சிகிச்சை குறித்த நேர்வு விளக்கம் இரண்டாவது பரிசை வென்றது.

தஞ்சாவூரின் பெருமையை சான்பிரான்சிஸ்கோவில் உயர்த்திய மீனாட்சி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் கேசவமூர்த்தி

இடையீட்டு இதயவியல் சிகிச்சையில் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தை இது முன்னிலைப்படுத்தியிருப்பதுடன், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரிலுள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.  

மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் இதுகுறித்து கூறுகையில், “மீனாட்சி மருத்துவமனைக்கும், தஞ்சாவூருக்கும் சர்வதேச கௌரவத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த டாக்டர். கேசவமூர்த்தி குறித்து நாங்கள் பெருமையும், பெருமிதமும் கொள்கிறோம். TCT 2025 மாநாட்டில் அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை, அவரது நீண்ட மருத்துவ சேவை பயணத்தில் ஒரு மிகச்சிறந்த மைல்கல் நிகழ்வாகும்.  எமது மருத்துவமனையில் வளர்த்துருவாக்க நாங்கள் தீவிரமாக பாடுபடும் சிகிச்சை நேர்த்தி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் இச்சாதனை அமைந்துள்ளது.  மீனாட்சி மருத்துவமனையில், திறமையான மருத்துவர்களை ஊக்குவிப்பதிலும், சமீபத்திய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதிலும் மற்றும் எமது வசதி அம்சங்களை தொடர்ந்து தரம் உயர்த்துவதிலும் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்.  இதன்மூலம் தஞ்சாவூரிலேயே உலகத் தரத்திலான இதய சிகிச்சையை நோயாளிகள் பெற்று பயனடைவதை உறுதி செய்வதே எமது குறிக்கோள்.” என்று கூறினார். 

சாதனையாளரான டாக்டர். கேசவமூர்த்தி கூறுகையில், “TCT 2025 போன்ற உலகளவில் புகழ்பெற்ற தளத்தில் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது ஒரு மிகச்சிறந்த கௌரவமாகும்.  இதனை நான் சாதிப்பதற்கு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கிய தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நிர்வாகத்திற்கும் மற்றும் சக மருத்துவர்களின் குழுவிற்கும் இச்சாதனையை நான் அர்ப்பணிக்கிறேன்.  ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு என்னை தொடர்ந்து ஊக்குவித்து உத்வேகம் அளித்து வரும் எனது சக மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த பெருமைமிகு தருணமானது, ஒரு தனிநபர் அல்லது மருத்துவமனைக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் மட்டுமல்ல; பிரமாதமான செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பு வழியாக தொடர்ந்து உத்வேகம் அளித்து வரும் அனைத்து இந்திய இதயவியல் சிகிச்சை நிபுணர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.  புதுமையான உத்திகள் மற்றும் ஒருங்கிணைந்த குழுப்பணி வழியாக நோயாளிகளின் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதில் எனது உறுதியையும், அர்ப்பணிப்பையும் இந்த அங்கீகாரம் மேலும் வலுப்படுத்துகிறது என்றார். 

TCT மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தும் கார்டியோவஸ்குலர் ரீசர்ச் ஃபவுண்டேஷன் (CRF), இடையீட்டு இதயவியல் மருத்துவத்தை முன்னேற்றுவதற்காக உலகளவில் இயங்கும் ஒரு தலைமை அமைப்பாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra: சியாரா பேஸ் வேரியண்டின் விலை? என்ன அம்சங்கள், வசதிகளை எதிர்பார்க்கலாம்? டாடா கார் அசத்துமா?
Tata Sierra: சியாரா பேஸ் வேரியண்டின் விலை? என்ன அம்சங்கள், வசதிகளை எதிர்பார்க்கலாம்? டாடா கார் அசத்துமா?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
Embed widget