மக்களே நாளை நீங்கள் கவனமாக இருக்கணும்... மின்தடை செய்யறாங்க
Thanjavur Power Cut (04-11-2025): தஞ்சை பகுதியில் நாளை (4.11.25) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanjavur Power Cut (04-11-2025): தஞ்சாவூர்: மாதாந்திர பணிகளுக்காக தஞ்சை பகுதியில் நாளை (4.11.25) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தஞ்சை பகுதி மக்கள் நாளை காலை சீக்கிரமே தங்கள் மின் தேவைகளை விரைவாக செய்து கொள்ளுங்கள்.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையம்
தஞ்சை மணி மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை 4.11.25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின் பகிர்மான கழக தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் விஜய்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அண்ணாநகர் பகுதி, அருளானந்த நகர், பிலோமினாநகர், சிட்கோ, அண்ணாநகர்,காமராஜர்நகர், பாத்திமாநகர், அன்பு நகர், மேரீஸ்கார்னர் பகுதி திருச்சிரோடு, வி.ஓ.சி.நகர், பூக்காரத்தெரு, 20-கண் பாலம், கோரிக்குளம், மங்களபுரம் பகுதி கணபதி நகர், ராஜப்பாநகர், மமேஸ்வரி நகர், திருப்பதி நகர்.
செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர்,டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன்நகர், வீட்டுவசதிவாரிய குடியிருப்புபகுதி, எஸ்.இ.ஆபிஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரி நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார் நகர், இந்திராநகர், கோ.ஆப்ரேட்டிவ் காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நிர்மலாநகர் பகுதி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எலிசாநகர், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர்,சேரன்நகர், காவேரிநகர் மற்றும் யாகப்பா நகர் பகுதி அருளானந்த அம்மாள்நகர், குழந்தை ஏசு கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வீரமரசன்பேட்டை துணை மின்நிலையம் (5.11.25)
தஞ்சாவூர் மாவட்டம் வீரமரசன்பேட்டை துணைமின்நிலையத்தில் வரும் 5ம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளதாவது: வீரமரசன்பேட்டை துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி வரும் 5ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து மின்வினியோகம் பெறும் பூதலூர், செல்லப்பன்பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீர கண்டியம்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனம்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லுர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதூரான் புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















