ஹெல்மேட் அணிந்து வந்தவர்களுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி... என்னன்னு தெரியுங்களா?
இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மேட் அணிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஹெல்மெட் அணிவதால் சாலை விபத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ளமுடியும்.

தஞ்சாவூர்: தலைக்கவசம் உயிர் கவசம் என்பதை அனைத்து மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர் போக்குவரத்து பிரிவு போலீசுடன் இணைந்து 2 லிட்டர் பெட்ரோலும், பராசக்தி படத்திற்கான டிக்கெட்டும் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மேட் அணிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஹெல்மெட் அணிவதால் சாலை விபத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ளமுடியும். மனித உயிர் விலைமதிப்பற்றது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிவேக பயணம் செய்யக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது. முறையாக அனைத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் இருக்கவேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு வாகனங்களை ஓட்ட வேண்டும். தங்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரை நினைத்து பார்க்க வேண்டும். ஹெல்மேட் அணிவதன் அவசியத்தை உணர வேண்டும் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஹெல்மெட் போட்டு இரு சக்கர .வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டுனர்களுக்கு விலையில்லாமல் 2 லிட்டர் பெட்ரோல், ஒருவருக்கு 3 டிக்கெட் வீதம் 50 பேருக்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்திற்கான டிக்கெட் கொடுத்து ஆகியவற்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர் தஞ்சாவூர் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஜோதி அறக்கட்டளையினர்.
தஞ்சையில் போலீசாருடன் இணைந்து ஜோதி அறக்கட்டளையினர் பல்வேறு வகையிலும் ஹெல்மேட் அணிவதன் அவசியத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பல பரிசுகள் வழங்கி வருகின்றனர். இவர்களின் இந்த ஹெல்மேட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மாநகர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களில் 70 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிய துவங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர் சப்தமின்றி நடத்தி வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே கூறலாம். இதை 100 சதவீதமாக உயர்த்த மாநகர போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு விழிப்புணர்வையும், இன்ப அதிர்ச்சியையும் ஹெல்மேட் அணிந்து வந்தவர்களுக்கு அளித்துள்ளது ஜோதி அறக்கட்டளை.

தஞ்சாவூர் ஆற்றுபாலம் ரவுண்டானா பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டுனர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்தவர்களுக்கு இன்முகத்துடன் ஹெல்மேட் அணிந்து வந்தீங்க இல்லையா. அதற்காக இந்த பரிசு என்று சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படத்தை பார்ப்பதற்கான டோக்கனை வழங்கினர்.
இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து ஹெல்மேட் அணிந்தவர்கள் மீள்வதற்குள்குள் விலையில்லாமல் இரண்டு லிட்டர் பெட்ரோல் போட்டு அனுப்பி வைத்தனர். ஒவ்வொருவருக்கும் தலா 3 டிக்கெட் வீதம் 50 பேருக்கு திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஹெல்மேட் அணிந்து இன்ப அதிர்ச்சி அடையும் வகையில் திரைப்பட டிக்கெட், விலையில்லாத 2 லிட்டர் பெட்ரோல் கிடைத்தது குறித்து வாகன ஓட்டுனர்கள் தரப்பில் கூறுகையில், இது எங்களை மோட்டிவேட் செய்யும் விதமாக இருந்தது. எதிர்பாராத நேரத்தில் புதிய படத்திற்கு டிக்கெட்டும் கொடுத்து, இலவசமாக பெட்ரோலும் போட செய்து இன்ப அதிர்ச்சிய ஏற்படுத்தி ஹெல்மேட்டின் அவசியத்தை விழிப்புணர்வுடன் எடுத்து கூறி வரும் ஜோதி அறக்கட்டளை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.





















