மேலும் அறிய

தஞ்சாவூர் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் சாதனை பயணம்: எதிர்பார்ப்பு அதிகரிப்பு

தஞ்சாவூர் நகராட்சி (அப்போது) மாமன்ற உறுப்பினராக தேர்வானார். 2011ம் ஆண்டு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டார். 2011 முதல் 2016 வரை மாமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படடுள்ள மேயர் சண்.ராமநாதனுக்கு பொதுமக்கள் தரப்பில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திமுக சட்டமன்ற தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சண்.ராமநாதன் யார்? அவர் மேற்கொண்ட கட்சிப்பணிகள், முன்னேற்றம் குறித்து பார்ப்போம். ஊர்: தஞ்சாவூர், தொகுதி: தஞ்சாவூர், படிப்பு: எம்.பி.ஏ., பிறந்த தேதி: 14.07.1976. 

ஜாதி: இசை வேளாளர், தற்போதைய கட்சி பதவி: தஞ்சாவூர் மாநகர செயலாளர். 1993ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது திமுக மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தோல்வியே வெற்றியின் முதல் படிக்கட்டு என்பார்கள். அதை அவ்வாறு பின்பற்றி வெற்றியை நோக்கியே தனது பயணத்தை தொடங்கினார். 1996ல் 40வது வட்ட திமுக நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார்.

2006ம் ஆண்டு தஞ்சாவூர் நகராட்சி (அப்போது) மாமன்ற உறுப்பினராக தேர்வானார். 2011ம் ஆண்டு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டார். 2011 முதல் 2016 வரை மாமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

2016 தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டார். 2017 தஞ்சை மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டார். 2022ல் 3வது முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வானார். தொடர்ந்து கட்சி தலைமை தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக சண்.ராமநாதனை தேர்வு செய்தது. 2023 தஞ்சாவூர் கழக மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

2022 முதல் 2026 தற்போது வரை மேயராக இருந்து வருகிறார். தற்போது தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அரசியலில் வலுவான பாதையை உருவாக்கி கொண்ட சண்.ராமநாதன் சட்டமன்ற தேர்தலுக்கு புதிய முகம். இவர் மீதான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கட்சிப்பணியில் வெகு தீவிரமாகவும், மேயராக மக்கள் பணிகளை விரைந்தும், துரிதமாகவும் செய்து செயல்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளார். கட்சிப்பணியில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்தார்.

கட்சி தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக பிரம்மாண்டமாக நடத்தி பாராட்டுக்களை பெற்றவர். 50 மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் என்று இருந்த மாநகரக் கழகத்தின் அமைப்பை மகளிர் மற்றும் இளைஞர் அணியை 1000 பேர் கொண்ட அணிகளாக மாற்றி உள்ளார். 10000 மேற்பட்ட மகளிர் உறுப்பினர்களையும். 8000 க்கும் மேற்பட்ட இளைஞர் உறுப்பினர்களையும் சேர்த்து சிறந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம் மாநகர பகுதி கழகத்தில் 250 க்கு மேற்பட்ட புதிய வழக்கறிஞர்களை கழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையும் கொண்டனர். 50000 மேற்பட்ட புதிய உறுப்பினர்களை மாநகரக் கழகத்தில் சேர்த்து கட்சி மென்மேலும் வளர்த்து வருகிறார். கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் எளிமையாக பழகக் கூடியவர்.

இதுவரை 11.01.2026 1215 நாட்களில் 601 நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக ஆளுமையுடன் நடத்தி தலைமையிடம் நற்பெயரை பெற்றுள்ளார். அண்ணா, கலைஞர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் ஊர்வலங்களை வழக்கத்திற்கு மாறாக மிக பெரும் பேரணியாக நடத்தி உள்ளார். பொதுக்கூட்டங்களை மாநாடு அளவிற்கு பிரம்மாண்டமாகவும், முதல்வர், துணை முதல்வர் தஞ்சை வருகையின் போதெல்லாம் மிக பிரம்மாண்டமான வரவேற்பு தந்து பாராட்டுகளை குவித்துள்ளார். மாநகர கழகம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட கிட்டத்தட்ட 23 அணிகள் நான்கு பகுதிகளிலும் கட்சி தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் அவர்களால் 700 க்கும் மேற்பட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டு மிகச் சிறப்பாக மாவட்ட கழக செயலாளர் அவர்கள் வழிகாட்டுதலோடு கழகப் பணிகள் மேற்கொண்டுள்ளார்.

1993 லிருந்து 2025 வரையில் கட்சி தலைமை அறிவிக்கும் அனைத்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தஞ்சாவூர் மாநகராட்சி தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக விருது பெற்றுள்ளார். தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யங்குளம் பழமை மாறாமல் புரணமிக்கப்பட்டதிற்காக ஒன்றிய அரசால் இண்டூரில் நடைபெற்ற விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி இந்தியாவிலே மூன்றாம் இடமும் தமிழ்நாட்டில் முதல் இடத்திற்கான விருதை பெற்று சாதனை படைத்தார். சிட்டிஸ் 2.0 திட்டத்தின் கீழ் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் இந்தியாவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாநகரம் தூய்மை மாநகரமாக மாற்றிட 168 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு கீழ் ICCC மூலம் மாநகராட்சி செயல்பாடுகளை கண்காணித்து ஏதேனும் குடிநீர், பாதாள சாக்கடை கழிவு நீர், குப்பை உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்தமைக்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு இந்தியாவில் 14 இடமும் தமிழ்நாட்டில் முதலிடம் விருதை பெற்றது. இவ்வாறு மேயராக சிறப்பான பணிகளை மேற்கொண்ட சண்.ராமநாதனை கட்சி தலைமை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget