மேலும் அறிய

நெருங்கும் தீபாவளி... களைக்கட்டும் திருச்சி: கூடுதல் கண்காணிப்பில் போலீசார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரில் திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாநகர போலீசார் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

திருச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரில் திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாநகர போலீசார் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். முக்கியமாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி என்றாலே மக்களுக்கு இனிப்பு, புத்தாடை, பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். அதிலும் கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் நகர்புறங்களில் உள்ள பெரிய ஜவுளிக்கடைகளுக்கு கூட்டம்,. கூட்டமாக வருவது வழக்கம். தள்ளுபடி அறிவிப்பு, புதிய ரகங்கள் என்று தீபாவளிக்கு திருச்சி களைக்கட்டும். அதோடு திருட்டு சம்பவங்களும் நடக்கும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக திருச்சி மாநகர போலீசார் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

திருச்சி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மார்க்கெட்டுகள் மற்றும் என்எஸ்பி ரோடு, பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 185க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சிங்காரத்தோப்பு, மலைவாசல், நந்தி கோவில் தெரு உள்ளிட்ட ஆறு இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நெருங்கும் தீபாவளி... களைக்கட்டும் திருச்சி: கூடுதல் கண்காணிப்பில் போலீசார்

மேலும், அனைத்து கண்காணிப்புக் கேமராக்களை கண்காணிக்கும் வகையில், தெப்பக்குளம் பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து திருச்சி மாநகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் கண்காணிக்க முடியும். இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.
 
பின்னர் அவர் கூறியதாவது: திருச்சி தெப்பக்குளம், என்எஸ்பி ரோடு மற்றும் மலைக்கோட்டை பகுதிகளில் 185 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் பணி புரியும் பெண்கள் மற்றும் கடைகளுக்கு வந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்கருதி முதன் முறையாக பெண் காவலர்கள் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அது மட்டுமின்றி நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது.

தரைக் கடைகளை மாற்று இடங்களில் அமைத்து நெரிசலை குறைக்க மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் போக்குவரத்து கழகத்தின் உதவியுடன் மன்னார்புரத்தில் இருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த 35 போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நாட்களில், கூடுதல் நேரம் கடையை திறக்க அரசு விதிமுறைக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும். அவ்வாறு செயல்படும் கடைகளுக்கு முழு ஒத்துழைப்பு காவல்துறை தரப்பில் அளிக்கப்படும்.

செல்போன் பறிப்பில் இளம்சிறார்கள் பெருமளவு ஈடுபட்டுள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. திருச்சி மாநகரில் அரசு நிதியுடனும், பொதுமக்கள் பங்களிப்புடனும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. செயல்படாத கேமராக்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பொருத்தும் பணியும், கூடுதல் கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனியார் பார்க்கிங் மற்றும் கட்டண பார்க்கிங் தீபாவளிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும். சாலைகளில் நிறுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். திருச்சி மாநகரில் 1145 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. அதில் 850 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது. இதனை வாரத்தில் ஒருமுறை கணக்கிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
Embed widget