மேலும் அறிய

இந்த தீபாவளியை நம் பாரம்பரிய நெய் உருண்டை, தினை உருண்டையுடன் உற்சாகமாக இனிப்பாக கொண்டாடுவோம்

தீபாவளி என்றாலே குட்டீஸ் முதல் பல்லு போன பெரியவர்கள் வரை ஸ்வீட்ஸ்தான் நினைவுக்கு வரும். அதை ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும்.

தஞ்சாவூர்: தீபாவளி என்றாலே குட்டீஸ் முதல் பல்லு போன பெரியவர்கள் வரை ஸ்வீட்ஸ்தான் நினைவுக்கு வரும். அதை ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். அந்த இனிப்புகள் ஆரோக்கியத்துடன் அமைந்தால். அது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

நவீன பலகாரங்கள் எண்ணெயில் பொரிக்கப்படுகிறது என்று சொல்வதை விட வறுத்து எடுக்கப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்தான் அதிகம் இல்லை... மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வணிக நோக்கத்துக்காக கவர்ச்சியாகவும், அதே நேரத்தில் வேலை குறைவாகவும் இருப்பதால் நவீன பலகாரங்கள் இக்காலத்தில் பிரபலமடைந்து விட்டன.

இதனால்தான் நம் பாரம்பரியத்தை என்றும் வலுவாக நிலை நிறுத்தும்  பலகாரங்கள் மறைந்து விட்டன என்றே கூற வேண்டும். நவீன வகை பலகாரங்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அப்படி என்னங்க கெடுதல் என்று கேட்கலாம். என்ன கெடுதல் இல்லை என்று கேட்பதுதான் சரியானதாக இருக்கும். வீட்டுக்கு வீடு இதய நோயாளி, அதிக ரத்த அழுத்தம், சொரியாசிஸ் என்கிற தோல் நோய் மிக முக்கியமாக பார்வை குறைபாடு போன்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

நம்முடைய மரபில் எண்ணெய் பலகாரம் இல்லை. ஆடிப்பெருக்கு திருநாளில் முறுக்கு, அதிரசம், நெய் உருண்டை, பொரி விளங்காய் உருண்டை போன்றவைதான் செய்யப்படும். இவைதான் அக்காலத்தில் கிட்டத்தட்ட பெரிய பலகாரங்களாக இருந்தன. இவற்றை செய்வதற்கும் இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவைதான் பயன்படுத்தப்பட்டன. இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்தன. சுவையை இன்னும் அதிகரித்தன. 

நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய்யும், புன்செய் பகுதியில் எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய், கடலையிலிருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய்யும் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் உடல் வெப்பத்துக்கு ஏற்ப இருக்கும். எனவே, இந்த எண்ணெய்கள் உடல் நலனுக்கு உகந்ததாக இருக்கின்றன.

இந்த தீபாவளியை நம் பாரம்பரிய நெய் உருண்டை, தினை உருண்டையுடன் உற்சாகமாக இனிப்பாக கொண்டாடுவோம்

நம்ம டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் அதிகம். இதனால் முறுக்கு, அதிரசம், எள்ளடை என்று வீட்டுக்குள் செய்யும் போது 10 வீடுகள் தாண்டியும் மணக்கும் பலகாரங்கள். உளுந்து ஆகச் சிறந்த உணவு என்பதால் நெய் உருண்டை, உளுந்தங் கஞ்சி, பச்சைப் பயறிலிருந்து நெய் உருண்டை போன்றவை செய்யப்படுவதும் வழக்கம். இதேபோல, வரகு, கேழ்வரகு போன்ற தானியங்களில் முறுக்கு, அதிரசம் செய்யும் பழக்கமும் இருந்தது.

தற்போது கருப்பு கவுனி அரிசியில் அல்வா, முறுக்கு, பச்சைப் பயறு கலந்து லட்டு போன்றவை செய்யப்படுகின்றன. கம்பு, பச்சைப் பயறு, வரகு, கருப்பு கவுனி போன்ற தானியங்களில் செய்யப்படும் நெய் உருண்டைதான் இப்போது லட்டு என அழைக்கப்படுகிறது.

இந்த நெய் உருண்டைக்கு கம்பு தானியத்தை ஊற வைத்து, முளைக்கட்டி உலர்த்தப்படும். நன்கு உலர்ந்த பிறகு அடுப்பில் வறுக்கப்படும். இதனுடன் சுவைக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக உருட்டப்படும். இதே முறையில்தான் பச்சைப்பயறு, வரகு, கருப்பு கவுனி, கொள்ளு, குதிரை வாலி, நவதானியம், நிலக்கடலை போன்றவற்றிலும் லட்டு செய்யப்படுகிறது.

நாம் மறந்தது இவற்றைதான். இப்போது கிடைக்கும் இனிப்பு வகைகளில் ருசியை அதிகரித்து தருவதற்காக பலவற்றையும் சேர்க்கின்றனர். ஆனால் நம் பாரம்பரிய இனிப்புகளில் சுவையூட்டி என்று எதுவும் கிடையாது. முக்கியமாக பச்சை பயறு உருண்டையில் அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. 

கம்பு, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.

இந்த தீபாவளியை நம் பாரம்பரிய நெய் உருண்டை, தினை உருண்டையுடன் உற்சாகமாக இனிப்பாக கொண்டாடுவோம்

திணையில் அதிகளவு இனிப்பு பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி, உளுந்தங்களி, பாயாசம், அதிரசம்,  மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம். கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. திணைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும். விரைவில் செரிமானமாகும். இப்படி பார்த்து பார்த்த செய்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை சாப்பிட்டுதான் நம் முன்னோர்கள் வெகு ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

அதே போல் நெய்யைப் பொருத்தவரை பசுந் நெய் மட்டுமல்லாமல், எருமை நெய்யையும் பயன்படுத்தலாம். மருத நிலத்து கால்நடை மட்டுமல்லாமல், வளர்ச்சிக்கான குறியீடாகவும் எருமை திகழ்கிறது. இதுவும் கரையக்கூடிய கொழுப்பாக இருப்பதால் சமையலுக்கு உகந்தது. மரபு வழி மருத்துவத்திலும் எருமை நெய் ஊக்கப்படுத்தப்படுகிறது என்பதால், இதையும் பயன்படுத்துவது தவறல்ல.

பூந்தி செய்வதாக இருந்தால் கடலை மாவுக்கு பதில் கம்பு அல்லது கேழ்வரகு அல்லது கருப்பு கவுனி அல்லது மற்ற தானியங்களை தண்ணீரில் கரைத்து, கடலை எண்ணெயில் பொரிக்கலாம். பலகாரத்தைப் பொருத்தவரை இலுப்பை எண்ணெய் சிறந்தது.

அடுத்தது நிலக்கடலையில் தயாரிக்கப்படும் கடலை இடி உருண்டை. ஆரோக்கியத்திற்கு வெகு உறுதுணை என்றால் மிகையில்லை. நிலக்கடலையைத் தோல் நீக்கி வறுத்து, வெல்லம் அல்லது கருப்பட்டி சர்க்கரையைச் சேர்த்து, உரலில் இட்டு இடித்து உருண்டை பிடித்தால் மணக்கும். கைகளிலேயே அவ்வளவு வாசனை நிரம்பி இருக்கும். இப்படி செய்யப்படும் கடலை இடி உருண்டை பலகாரம் நம் பாரம்பரியத்தின் அடையாளம். 

இதுபோன்ற பாரம்பரிய பலகாரங்களால் எந்த நோயும் வராது. நோயின்றி வாழலாம். அதுமட்டுமா உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. கம்பு, கேழ்வரகு, வரகு போன்றவை கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடியது. கொள்ளு தானியத்தைப் பொருத்தவரை கெட்ட கொழுப்பைக் கரைக்ககூடியது என்பதால், குதிரைக்கு கொடுக்கப்படுகிறது. அதனால்தான் குதிரையின் உடல் பளபளப்பாக இருக்கிறது. இதேபோல, கொள்ளு சாப்பிட்டால் நம்முடைய உடலும் பளபளப்பாக இருக்கும்.  இந்த கொள்ளு தானியத்தில் லட்டு செய்யலாம்.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வரகு கெட்டுப் போகாது. அதனால்தான் கோயில் குடமுழுக்கு விழாவின்போது கலசங்களில் வரகு தானியம் நிரப்பப்படுகிறது. வெள்ளை உளுந்தில் ஜிலேபி செய்வது வழக்கம். இதேபோல, கருப்பு உளுந்திலும் தோல் நீக்காமல் ஜிலேபி செய்யலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது

நாம் மறந்து போன அல்லது மறக்கடிக்கப்பட்ட உணவு வகைகளை இந்த தீபாவளியில் மறக்காமல் செய்வோம்... அல்லது செய்து விற்பனை செய்வதை வாங்குவோம். நம் பாரம்பரியத்தை காப்போம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget