மேலும் அறிய
Advertisement
திருவாரூர் : புகையிலை, பான்மசாலா, குட்காவுக்கு எதிராக வணிகர் சங்க நிர்வாகிகள் உறுதியேற்பு..!
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, மற்றும் நிக்கோட்டினை சேர்க்கப்பட்ட பொருளாகக் கொண்ட குட்கா, பான் மசாலா, மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும்பொழுது வாய்ப்புண் குடல் புண், மற்றும் புற்றுநோய், போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும் எனவும் இறுதியாக உயிரிழப்பை ஏற்படுத்தும், ஆகையால் இவை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகும். மேலும் வணிக நிறுவனங்கள் இதனை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகையிலை, பான்மசாலா, குட்கா ஒழிப்பு உறுதி மொழியாக உணவு வணிகர் ஆகிய நான் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோடினை சேர்க்கப்பட்ட பொருளாகக் கொண்ட குட்கா பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது வாய்ப்புண் குடல்புண் மற்றும் புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும் எனவும், இறுதியாக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.
ஆகையால் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்க்கப்பட்ட பொருட்கள் கொண்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட எந்த சுவைக்கும் பொருட்களையும் தயாரிக்கவோ, வாகனங்களில் எடுத்துச் செல்லவோ, விநியோகிக்கவும், சேமிக்கவும், மற்றும் விற்பனை செய்யவும் மாட்டேன் எனவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் நலன் காத்திட நானும் எனது நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்களும் ஒத்துழைத்து உணவு வணிகம் புரியவும் என்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்மசாலா குட்கா கூல்லிப் போன்ற புகையிலைப் பொருட்களை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும் போது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும். குறிப்பாக வாய்ப்புண் குடல்புண் மற்றும் புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியாக மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆகையால் இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேமித்து வைத்திருப்பது மற்றும் அதை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 5000 வரை அபராதம் விதிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
இது தொடர்பாக இன்று வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் எடுத்துரைக்கின்ற விதமாக உறுதிமொழி பெறப்பட்டது. மேலும் மாவட்டத்தில் குட்கா பான்மசாலா விற்பனை செய்வது தெரிய வந்தால் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். அவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் விற்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சௌமியா சுந்தரி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், கர்ணன், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion