மேலும் அறிய
Advertisement
Kallanai Canal Rehabilitated: 87 ஆண்டுகளுக்கு பின் கல்லணை கால்வாய் சீரமைப்பு
ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மேல்பகுதியில் காட்டாறும், அதன் கீழே பாசன ஆறும் செல்லும் வகையில் வியக்க வைக்கும் கட்டுமானத்தை தற்போது பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் கல்லணைக் கால்வாயில் உள்ள கீழ்குமிழி சீரமைக்கப்பட்டுள்ளது
ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மேல்பகுதியில் காட்டாறும், அதன் கீழே பாசன ஆறும் செல்லும் வகையில் வியக்க வைக்கும் கட்டுமானத்தை தற்போது பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் கல்லணைக் கால்வாயில் உள்ள கீழ்குமிழி சீரமைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணை கட்டப்பட்ட அதே கால கட்டமான 1928-ம் ஆண்டு முதல் 1934-ம் ஆண்டு வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கல்லணைக் கால்வாய் என்றழைக்கப்படும் புதாறு வெட்டப்பட்டது. இந்த பாசன ஆறு வெட்டப்படும்போது, மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் செல்ல வடிகால்களும் முறையாக செப்பணிடப்பட்டது.
காட்டாறும், பாசன ஆறும் கலக்காத வகையில் கல்லணைக் கால்வாயின் குறுக்கே 100- க்கும் மேற்பட்ட இடங்களில் "சைப்பன்கள்" அமைக்கப்பட்டது. இதில் பாசன ஆறு மேல்பகுதியிலும், காட்டாறு வாய்க்கால்கள் அதன் அடிபகுதியிலும் செல்லும். அதே போல் காட்டாறு மேல்பகுதியிலும், பாசன ஆறு அதன் கீழ் பகுதியிலும் செல்லும் வகையில் அடப்பன்பள்ளம், கண்டிதம்பட்டு, ஈச்சன்விடுதி உள்ளிட்ட நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் "கீழ்குமிழி" என அழைத்து அதனை ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் பிரதானமானது தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டில் உள்ள கீழ்குமிழி. இங்கு மேல்பகுதியில் வல்லம்வாரி எனப்படும் காட்டாறு செல்கிறது. வல்லம் பகுதியில் பெய்யும் மழைநீர் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து இதன் வழியாக 29 கி.மீட்டர் தூரம் பயணித்து வடுவூர் அருகே கண்ணனாற்றில் சேருகிறது. கல்லணைக் கால்வாய் ஆற்றில் கீழ்குமிழி என்றழைக்கப்படும் இடத்தில் 8 கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கன அடிநீர் வந்தாலும் அப்படியே உள்வாங்கி சுமார் 100 அடி தூரத்துக்கு உள்பகுதியில் பாய்ந்து பின்னர் வெளியேறும் வகையில் இந்த கட்டுமானம் செங்கல் - சுண்ணாம்பு கலவைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த வியக்க வைக்கும் கட்டுமானத்தை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தற்போதும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
பழமை மாறாமல்; இந்நிலையில் கல்லணைக் கால்வாய் ஆறு தனது முழு கொள்ளளவான 4,700 கன அடிநீர் செல்ல வேண்டும் என்பதற்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் 148 கீலோ மீட்டர் தூரமுள்ள இந்த ஆறு ரூ.2639.15 கோடியில் 16 தொகுப்புகளாக முழுமையாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக கண்டிதம்பட்டு கீழ்குமிழியும் சீரமைக்கப்பட்டு, அதன் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இந்த கட்டுமானம் அப்படியே பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லணைக் கால்வாய் உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் கூறியதாவது: கல்லணைக் கால்வாய் என்பதே ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பொறியாளர் எல்லீஸ் என்பவரால் கொண்டு வரப்பட்ட அற்புதமாக பாசன திட்டமாகும். இதில் கண்டிதம்பட்டு கீழ்குமிழியில் வல்லம் வாரி மேல்பகுதியில் எவ்வித இடையூறும் இல்லாமல் மழைக்காலத்தில் தண்ணீர் ஓடும். பாசனநீர் கல்லணைக் கால்வாயில் ஓடும். துவரை அந்த இடத்தில் ஒரு கசிவு கூட வந்ததில்லை. தற்போது கல்லணைக் கால்வாய் முழுவதுமாக சீரமைக்கப்படுவதால், இந்த கீழ்குமிழியும் வலுப்படுத்தப்படுகிறது, என்றார்.
87 ஆண்டுகள் கழித்து, தற்போது தான் கீழ்குமிழி சீரமைக்கப்படுகிறது. 80 சதவீத பணிகள் கீழ்குமிழியில் நிறைவு பெற்றுள்ளது. இதற்காக கல்லணைக் கால்வாய் ஆற்றில் கீழ்குமிழியில் சிக்கிய குப்பை கழிவுகள் மட்டும் 20 டன் அளவுக்கு அகற்றி, அந்த இடத்தினை முழுமையாக சீரமைத்துள்ளோம் .தொடர்ந்து அடுத்தாண்டுகளில் மீதியுள்ள கீழ்குமிழிகளும் பழமைமாறாமல் அப்படியே வலுப்படுத்தப்பட உள்ளது என்றார். நவீன தொழில் நுட்பத்தில் பழமை மாறாமல் கல்லணை கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion