மேலும் அறிய

மயிலாடுதுறை: அதிகரிக்கும் எண்ணிக்கை, புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தொற்றின் எண்ணிக்கை 21,483-ஆக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்  காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மயிலாடுதுறை: அதிகரிக்கும் எண்ணிக்கை, புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் சற்று அச்சமடைய தொடங்கியுள்ளனர். இன்று மட்டும் 29 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட 5 பேருக்கு குறைவு என்றாலும் பரிசோதனை அடிப்படையில் இது அதிகம். இதுவரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 483 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 20 ஆயிரத்து 928 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 29 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 25 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 274 ஆக தொடர்கிறது.

மயிலாடுதுறை: அதிகரிக்கும் எண்ணிக்கை, புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 63 ஆயிரத்து 570 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், முதல் தவணை தடுப்பூசி 4 லட்சத்து 3 ஆயிரத்து 787 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 59 ஆயிரத்து 783 பேருக்கும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், கோவாக்சின் 51 ஆயிரத்து 341 பேருக்கு கோவிஷீல்ட் 4 லட்சத்து 12 ஆயிரத்து 229 பேருக்கும் போடப்பட்டுள்ளது எனவும், நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி  தொடரப்பட்டுள்ளது என்றும். இன்று மட்டும் 5001 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்து 786 ஆண்களுக்கும், 2 லட்சத்து 36 ஆயிரத்து 624 பெண்களுக்கும், திருநங்கைகள் 70 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget