மேலும் அறிய

தொடர் கனமழை - திருவாரூரில் நீரில் மூழ்கிய 15,000 ஏக்கர் நெற்பயிர்கள்

’’கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தன’’

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 60 சதவீதம் நேரடி விதைப்பில், 40 சதவிகிதம் நடவு பணியிலும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில்  இருந்து திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த மூன்று நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் மழையின் காரணமாக 15 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது

தொடர் கனமழை - திருவாரூரில் நீரில் மூழ்கிய 15,000 ஏக்கர் நெற்பயிர்கள்
 
இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மீண்டும் 15,000 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் முழு கொள்ளளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்பொழுது ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளோம்.
 
தமிழ்நாடு முதல்வர் எங்கள் மாவட்டங்களை ஆய்வு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டால் 6 ஆயிரம் மதிப்பில் இடு பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் எங்களுக்கு இனி இடுபொருள்கள் கொடுத்து எந்தப் பயனும் இல்லை. காரணம் இன்னும் 60 நாட்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் இனி புதிதாக விதை விதைக்கவும் தெளிக்கவும் முடியாது. ஆகையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முழுமையாக கணக்கெடுத்து எங்களுக்கு உரிய நிவாரணத்தை வங்கி கணக்கு மூலமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் கனமழை - திருவாரூரில் நீரில் மூழ்கிய 15,000 ஏக்கர் நெற்பயிர்கள்
.
அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக வேளாண்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் அனைத்து அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தரவேண்டும் மேலும் மழை பாதிப்பு சம்பந்தமாக பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget