மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
காரைக்கால் மார்க் துறைமுகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திடீரென துறைமுகத்தில் காங்கிரஸ் கட்சியினர் நுழைய முற்பட்டால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் மார்க் துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு தாரைவார்த்த மத்திய அரசை கண்டித்து மாநில இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் துறைமுகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதை கண்டித்தும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும் காரைக்கால் மக்களின் வேலை வாய்ப்பிற்காகவும் காரைக்காலில் தனியார் துறைமுகம் கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கி செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு நிலக்கரி துகள்கள் பறந்து துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதால் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதை கண்டித்தும் அதை தடை செய்ய வலியுறுத்தியும், துறைமுகத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் துறைமுக வாயிலில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மாவட்ட தலைவர் சந்திரமோகன் இலங்கை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது திடீரென துறைமுகத்தில் நுழைய காங்கிரஸ் கட்சியினர் முயன்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஜோஷ்வா, மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion