தஞ்சையில் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை தொடங்கி வைத்த கலெக்டர்
கலப்படம் அல்லது தரம் குறைவு என கண்டறியப்படும் உணவு மாதிரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட கலெக்டர் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி துவக்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தரமான கலப்படம் அற்ற பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்ற உரிய நோக்கத்திற்காக நேற்று தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் துவக்கி வைக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு துறையின் ஆறு உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் நேற்று தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ளது.
நமது தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையில் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ள உணவு மாதிரிகளில் 569 உணவு மாதிரிகள் தரமற்ற உணவு மாதிரி உள்ளாக அதாவது லேபிள் குறைபாடு தரம் குறைந்த பாதுகாப்பற்ற மற்றும் தடை செய்யப்பட்ட தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுப் பொருட்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடமாடும் உணவு ஆய்வகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் உள்ள உணவுப் பொருட்களின் தரம் அதில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிந்து அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் உணவு ஆய்வகத்தில் குடிநீர், பால், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள். இனிப்பு கார உணவு வகைகள் மற்றும் இதர மளிகை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தினை உடனடியாக ஆய்வு செய்வதற்கு ஏற்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் கண்டறிந்த தரமற்ற உணவு மாதிரிகளின் தன்மை உறுதி செய்ய சட்டம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும். கலப்படம் அல்லது தரம் குறைவு என கண்டறியப்படும் உணவு மாதிரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தரம் குறைந்த மற்றும் கலப்படம் உள்ள உணவுப் பொருட்கள் லேபிள் குறைபாடு உள்ள மற்றும் தடை செய்யப்பட்ட உணவு மாதிரிகள் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 569 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு 64,22,500 ரூபாய் வருவாய் ஈட்டி தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாணவ மாணவியர் சுய உதவி குழுவினர் உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள் உணவுப்பொருள் விற்பனையாளர்கள் நுகர்வோர் நல அமைப்பினர் அனைவரும் இந்த நடமாடும் பரிசோதனை வாகனத்தினை பயன்படுத்தி இணைப்பு உணர்வு ஏற்படுத்திக் கொண்டு தங்கள் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடிய உணவுப் பொருட்களின் தரங்கள் கண்டறிந்து பாதுகாப்பான உணவு எவை என்பதை தெரிந்து கொண்டு பலன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தஞ்சை கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, உணவு பாதுகாப்பு அதிகாரி சித்ரா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பிரேமலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





















