மேலும் அறிய

தஞ்சை: நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் - புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

’’பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 2350 ரூபாய், டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 1700 ரூபாய் என வாடகை நிர்ணயம்’’

தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதல் வாடகை கேட்டால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாவது போகமான சம்பா மற்றும் ஒரு போகமான தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இந்தாண்டு சம்பா-தாளடிக்கு 13.5 லட்சம் ஏக்கர் வேளாண்மைத்துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். தற்போது 90 சதவீத நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றது.  சம்பா, தாளடி நடவுப்பணி அதிக அளவில் நடைபெற்றுள்ளதால், அறுவடை இயந்திரங்களை வைத்திருப்பவர்கள், கூடுதலாக வாடகையை வசூலிப்பார்கள், விவசாயிகளும் அறுவடை செய்ய வேண்டும் என்ற காரணத்தால் வேறு வழியில்லாமல் கூடுதலாக வாடகையை கொடுத்து அறுவடை செய்வார்கள். இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாவார்கள்.

தஞ்சை: நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் - புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இதனை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையினை முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 2350 ரூபாய், டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 1700 ரூபாய் என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.  நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடம் இருந்து வசூல் செய்து அறுவடை இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தஞ்சை: நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் - புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட வாடகையினை விட கூடுதலாக விவசாயிகளிடம் இருந்து வாடகை வசூல் செய்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இயங்கிவரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், தஞ்சாவூர், செயற்பொறியாளர் (வே.பொ) எண். 90035 23343, தஞ்சாவூர், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 90805 52519, கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 94436 78621, பட்டுக்கோட்டை, உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 99761 93110 மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எண். 94420 93161, தஞ்சாவூர், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 94875 96121, கும்பகோணம், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848 08368, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848 08335 என்ற எண்களில் புகார் தெரிவித்திட கேட்டு கொள்ளப்படுகிறது. 

மேலும், தங்கள் புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக மேற்காணும் அலுவலர்களுக்கோ அல்லது தஞ்சை விவசாயி குறைதீர்ப்பு என்ற வாட்ஸ்ஆப் குரூப் மூலமாகவோ பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகள் தங்களுடைய புகார் மனுக்களை நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அளித்திடலாம்.  விவசாயிகளின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget