மேலும் அறிய

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி 300 டன்கள் குப்பைகள் சேகரிப்பு

அதிகாலை 4.30 மணி முதல், சுமார் 600  நிரந்தர மற்றும் தற்காலிக, மாநகராட்சிப் பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளில்  தினந்தோறும் 110 டன்கள் முதல் 120 டன்கள் குப்பைகள் சேகரமாவது வழக்கம். இவை அனைத்தும் தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி, பள்ளியக்கிரஹராம், கரந்தட்டான்குடி, காந்திஜி சாலை, அண்ணா சாலை, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், தெற்கு அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாகப் புத்தாடைகள் வாங்க வருவதற்காக ஏராளமானோர் இப்பகுதிகளில் திரண்டனர். இதனால், இப்பகுதிகளில் குப்பைகள் அதிகமாகச் சேகரமானது. தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி நாளில் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசு குப்பைகளும் சேர்ந்ததால், இரு நாள்களில் குப்பைகள் அதிகமாகின. இந்நிலையில் தீபாவளி நாளில் பொது மக்கள், பகலில் பட்டாசு வெடிப்பதை விட, மாலை இரவு நேரங்களில் அளவுக்கதிகமாக பட்டாசு மற்றும் மத்தாப்புகளை வெடித்தனர்.  இதனால் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பட்டாசு வெடித்த குப்பைகள், பேப்பர்கள் சேர்ந்தன.

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதை எதிர்த்து 16ஆம் தேதி போராட்டம் - பிஆர்.பாண்டியன்

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி 300 டன்கள் குப்பைகள் சேகரிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 300 டன் குப்பைகளை சேர்ந்தன. கடந்தாண்டு கொரோனா தொற்று காரனத்தால், பட்டாசுகள் விற்பனை குறைந்திருந்தது. இதனால் குப்பைகளே குறைவாக சேர்ந்தன. இந்நிலையில், கொரோனை தொற்று தளர்த்தப்பட்டதால், அடித்தட்ட மக்கள் முதல் பெரு முதலாளிகள் வரை பட்டாசுகளை வாங்கி குவித்தனர்.பொது மக்கள் ஆம் தேதி, 4 ஆம் தேதி, 5 ஆம் தேதி காலை வரை பட்டாசுகளை வெடித்ததால், தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் பட்டாசு வெடித்த குப்பைகளை சேர்ந்தன. கடந்தாண்டு கொரோனா தொற்றால், பணப்பறிமாற்றம் குறைந்து, பட்டாசுகள், போதுமான அளவில் வராமலும், விலை உயர்ந்ததால், கடந்தாண்டு பொது மக்கள் மிகவும் குறைவாக பட்டாசுகளை வாங்கி கொண்டாடினர். 

அந்த போலீஸ் வன்னியரா? ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் - வன்னியர் சங்கத் தலைவர்

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி 300 டன்கள் குப்பைகள் சேகரிப்பு

ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி-பணம் வராததால் கடப்பாரையை விட்டு சென்ற திருடன்

ஆனாலும், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பட்டாசுகளின் புகை அதிகமாக இருந்ததால், மாநகரம் முழுவதும் மாலை நேரத்தில் புகை மண்டலமாக காட்சியளித்தது. எனவே, அதிகாலை 4.30 மணி முதல், சுமார் 600  நிரந்தர மற்றும் தற்காலிக, மாநகராட்சிப் பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தத் தூய்மைப் பணியில் 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஏறத்தாழ 300 டன்கள் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. ஒரே நாளில் இரு மடங்குக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டன.

தொடர் மழையால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் 10,000 இல் இருந்து 23,000 கன அடியாக உயர்வு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget