மேலும் அறிய
Advertisement
டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து; போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - விவசாயிகள் கருத்து
குரல்கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குறிப்பாக தமிழக அரசுக்கு விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிலக்கரி ஏலப்பட்டியலில் இருந்து டெல்டா மாவட்டங்களை விடுவித்தது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் சேதுராமன் கூறுகையில், “காவிரி டெல்டா பகுதிகளில் மூன்று நிலக்கரி வட்டாரங்களுக்கு ஏலம் கடந்த 29ஆம் தேதி மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் விடப்பட்டிருந்தது. காவிரி டெல்டா பொறுத்தவரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இந்த பகுதியில் எதிர்மறை அம்சங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாக இருந்து வருகிறது. 2015 நிலக்கரி படுகை மீத்தேன் எடுப்பதற்கு நிரந்தர தடையும் 2020ல் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடையும் விதைக்கப்பட்டு இருந்த சூழலில் தற்போது நிலக்கரி எடுக்க ஏலம் அறிவிப்பு விடப்பட்டிருந்தது விவசாயி மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த அடிப்படையில் அனைத்து கட்சிகளும் ஒரே குரலாக டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என கூறியது வரவேற்கப்பட தக்க விஷயம். அதனைத் தொடர்ந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரி அமைச்சரை சந்தித்து டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கு அனுமதி அளிக்க க்கூடாது. அதன் அடிப்படையில் மத்திய நிலக்கரி அமைச்சர் ஏலப்பட்டியலில் இருந்து டெல்டா மாவட்டங்களை விடுவித்து மத்திய அமைச்சர் கூறியுள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் மக்களுக்கான உணர்வு மதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார் அதனையும் வரவேற்போம். அதே போன்று விவசாயிகளின் போராட்டத்தை மதித்து உடனடியாக மத்திய அமைச்சர் டெல்டா பகுதிகளில் நிலக்கரி டெண்டர் ரத்து செய்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம். இதற்காக குரல்கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குறிப்பாக தமிழக அரசுக்கு விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என சேதுராமன் தெரிவித்தார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் கூறுகையில், “காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பேரழிவு திட்டங்கள் அனைத்தும் அந்த திட்டங்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது திடீரென கடந்த நான்காம் தேதி மத்திய அரசு நிலக்கரி சுரங்கத் துறை காவிரி டெல்டாவை வடசேரி நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் அறிவித்திருந்தது. இதனை அறிந்து விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர் அதனை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பிரதமரை வலியுறுத்தி திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடிதம் எழுதினார். மீண்டும் ஐந்தாம் தேதி சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக முதலமைச்சர் தலைமையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பியது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேரடியாக விவசாயி கோரிக்கையை ஏற்று திட்டத்தை கைவிடப்பட வேண்டும் என மத்திய அமைச்சரை வலியுறுத்தினார். இந்த நிலையில் இன்று காலை மத்திய அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் காவிரி டெல்டாவில் வடசேரி முதல் மூன்று பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டரை ரத்து செய்யப்படும் அது உடனடியாக திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பை விவசாயிகள் வரவேற்கிறோம். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கின்ற அடிப்படையில் இந்த திட்டம் தமிழக அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு வெளியிட்டது திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion