(Source: ECI/ABP News/ABP Majha)
படியில் பயணம் செய்ததை தட்டிக்கேட்ட கண்டக்டருக்கு அடி உதை
ஆபத்தான நிலையிலிருந்த அன்பழகன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் போலீசார், கண்டக்டரை தாக்கிய மூன்று மாணவர்களை தேடி வருகின்றனர்
தஞ்சை மாவட்டம் திருவைகாவூரில் இருந்து கும்பகோணத்தை நோக்கி அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் கண்டக்டராக அன்பழகன் (55) என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் அப்பஸ்சின் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும், உங்களுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், எனது நிலை கேள்வி குறியாகி விடும் என்று அறிவுரைகளை வழங்கிய கண்டக்டர் அன்பழகன், பட்டிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவர்களை, பஸ்சிற்குள் வாருங்கள் என்றார்.
ஆனாலும் பஸ்சின் படிக்கட்டில் நின்ற மாணவர்கள் உள்ளே வராமல் பயனம் செய்தனர். பல முறை கூறியும் பள்ளி மாணவர்கள் கேட்காததால், ஆத்திரமடைந்த கண்டக்டர் அன்பழகன், பஸ்சை சுவாமிமலை காவல் நிலையத்தில் நிறுத்த டிரைவரிடம் கூறினார். பின்னர் காவல் நிலையத்திற்குள் சென்று, பள்ளி மாணவர்கள், படிக்கட்டில் நின்று பயணம் செய்யாகிறார்கள், அவர்களுக்கு அறிவுரை வழங்கியும் கேட்காமல், உயிருக்கு ஆபத்து நிலையில் படிக்கட்டில் நின்று பயணம் செய்கிறார்கள் என்று வாய்மொழியாக புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார், பள்ளி மாணவர்களை எச்சரித்து, அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து மாலை அந்த பஸ் வழக்கம் போல் கும்பகோணத்திலிருந்து திருவைகாவூருக்கு சென்றது. அதில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவர்களும் பயணம் செய்தனர்.
அப்பஸ், ஆதனுார் பஸ் நிறுத்தம் வந்ததும், அந்த மாணவர்கள், பஸ்சிற்குள் இருந்த கண்டக்டர் அன்பழகை சரமாறியாக தாக்கினா். பள்ளி மாணவர்களின் திடிரென தாக்கியதால், பஸ்சில் இருந்த பயணிகள், பள்ளி மாணவிகள் அலறி அடித்து அடித்த கூச்சலிட்டபடி ஒடினர். ஆனாலும் பள்ளி மாணவர்கள், கண்டக்டரை விடாமல் தாக்கி விட்டு, தப்பியோடி விட்டனர். இதில் கண்டக்டர் அன்பழகனின் சட்டை கீழிந்து, படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையிலிருந்த அன்பழகன், கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் போலீசார், கண்டக்டரை தாக்கிய மூன்று மாணவர்களை தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் கண்டக்டரை தாக்கிய சம்பவம் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடையை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தாக்கிய மாணவர்கள், ஆதனுாரை சேர்ந்தவர்கள் என்றும், கும்பகோணம், சக்கரபாணி சுவாமி கோயில் அருகிலுள்ள நேட்டிவ் பள்ளி மாணவர்கள் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.