மயிலாடுதுறை: உக்ரைனில் சிக்கிய மகள்: ஆட்சியர் அலுவலகம் வந்த பெற்றோரை அலைக்கழித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறையில் ஆட்சியரை சந்திக்கமுடியாமல் தவித்த உக்ரைனில் சிக்கியுள்ள மாணவியின் பெற்றோரை நேரில் அழைத்து நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் ஆட்சியர் ஆறுதல் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கோவாஞ்சேரியை சேர்ந்த ஆனந்தன்-கவிதா தம்பதியினரின் மகளான 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி ஆர்த்திகா என்ற மாணவி உக்ரைன் கார்கிவ் பகுதியில் 5ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைன் நாட்டில் கார்கியூ பகுதியில் இவருடன் தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் தங்கியுள்ளனர்.
உக்ரைன் கார்கிவ் பகுதியில் தொடர்ந்து ரஷ்யா தாக்குல் நடத்தி வருவதால், மெட்ரோல் ரயில் பாதை, பதுங்குகுழிகளில் மாணவிகள் தஞ்சமடைந்து உள்ளனர். இந்நிலையில் மாணவி ஆர்த்திகா இருக்கும் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடப்பதால் அங்குள்ள தமிழக மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்குகொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தனது பெற்றோருக்கு வாட்ஸ்அப் வீடியோவில் மாணவி பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கடந்த 26ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
IPL 2022: ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பின்னடைவு - இங்கி. வீரர் திடீர் விலகல் !
இந்ந சூழலில் தற்போது வரை தங்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவியின் பெற்றோர் ஆனந்தன்- கவிதா மாவட்ட ஆட்சியர் லலிதாவை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்துள்ளனர். ஆனால் ஆட்சியரை சந்திக்கவிடாமல் அதிகாரிகள் பெற்றொர்களை அலைக்கழித்துள்ளனர்.
அதனை பொருட்படுத்தாமல் மதியம் வரை பெற்றோர்கள் ஆட்சியரின் கார் அருகே காத்திருந்த நிலையில் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியே செல்ல வந்தபோது அங்கே காத்திருந்த ஆனந்தன்- கவிதா தம்பதியரை அழைத்து விபரங்களை கேட்டதோடு கார்கிவ்வில் சிக்கியுள்ள மாணவி ஆர்த்திகாவுடன் வாட்ஸ்அப் வீடியோகாலில் பேசினார்.
அப்போது மாணவி தூதரகத்தில் இருந்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றும் தன்னைபோன்று தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கிதவிப்பதாகவும் பாதுகாப்பான இடங்களுக்கு எங்களை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று மாணவியிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரை சந்திக்கவிடாமல் அதிகாரிகள் அலைக்கழித்த நிலையில் மாவட்ட ஆட்சியரே தங்களை கூப்பிட்டு கனிவாக பேசியது பெற்றோர்களுக்கு ஆறுதலை தந்தது.
மிளகாய் தூள் கலப்படம் செய்யப்பட்டதா? தெரிந்து கொள்வது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ்!