மேலும் அறிய

டெல்டா மாவட்டத்திலேயே முதல்முறை... இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த தஞ்சாவூர் அபெக்ஸ் மருத்துவமனை

மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 21 வயது வாலிபரின் இதயத்தை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

தஞ்சாவூர்: மதுரையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயத்தை 2 மணிநேரத்தில் தஞ்சைக்கு கொண்டு வந்து 51 வயதுடையவருக்கு பொருத்தி அபெக்ஸ் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. 

தஞ்சாவூரில் உள்ள அபெக்ஸ் (Apex)  மருத்துவமனையில், இறுதி கட்ட இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பால்ராஜ் (51) என்பவர் சிகிச்சை பெற்று வருகிறது. இவர் 2012 மற்றும் 2019ம் ஆண்டு என இரண்டு முறை ஸ்டென்ட் சிகிச்சை பெற்றவர். மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் உயிர் பிழைத்திருந்த இவருக்கு, 'இறுதி கட்ட இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதற்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. கடந்த மூன்று வாரங்களாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தார்.


டெல்டா மாவட்டத்திலேயே முதல்முறை... இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த தஞ்சாவூர் அபெக்ஸ் மருத்துவமனை

இந்தச் சூழலில், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 21 வயது வாலிபரின் இதயத்தை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அரசின் 'டிரான்ஸ்டான்' (TRANSTAN) அமைப்பின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் அந்த இதயம் தஞ்சாவூர் அபெக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  பால்ராஜூக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரையிலிருந்து தஞ்சாவூருக்கு அபெக்ஸ் இருதய மருத்துவமனையின் டாக்டர் சி.சிவசங்கர் நேரடியாக ஆம்புலன்ஸ்சில் கொண்டு வந்தார். இதயத்தை விரைவாகக் கொண்டு வர போலீசார் பெரும் உதவி செய்தனர். போக்குவரத்து நெரிசல் இன்றி 'ரிலே' முறையில் எவ்வித தடைகளும் இன்றி கொண்டு வர உதவிகள் செய்தனர். மேலும் சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனம் நிற்காமல் செல்ல ஏற்பாடுகள் செய்தனர். இதனால் தாமதமின்றி இதயம் தஞ்சாவூருக்கு கொண்டு வரப்பட்டது. 

இதில் தஞ்சாவூர் எல்லையில் இருந்து அபெக்ஸ் மருத்துவமனையை அடையும் வரை போக்குவரத்து பிரிவு போலீசார் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதையடுத்து காலை 9 மணிக்கு மதுரையிலிருந்து இதயத்துடன் புறப்பட்ட ஆம்புலன்ஸ் 2 மணிநேரத்தில் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்து வெற்றிகரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பால்ராஜூக்கு பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்திலேயே முதல்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சையை அபெக்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாக செய்து சாதித்துள்ளது. 

இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட பின்னரல் அபெக்ஸ் இருதய மருத்துவமனையின் டாக்டர்.சி.சிவசங்கர்,டாக்டர்.சி.ரவிசங்கர் ஆகியோர் கூறுகையல், டாக்டர். ஆஷிக் , ஜெயலட்சுமி, சத்தியனந்தன், விக்னேஷ் , அமித், அஷ்வந்திகா, அலெக்ஸ், சுந்தர், பாலாஜி, ஆனந்த் அஜித் குழுவினருடன் சேர்ந்து ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்.ஸ்ரீநாத் தலைமையிலான டாக்டர்கள் செந்தில்குமார், ஜெபின், குணாளன், மற்றும் பூபதி , கார்த்திக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. 

இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற, டிரான்ஸ்டான்  அமைப்பின் முழுமையான ஒத்துழைப்பும், மதுரையிலிருந்து தஞ்சாவூர் வரை இருதயத்தை பாதுகாப்பாகவும் வேகமாகவும் கொண்டு வந்து சேர்க்க உதவிய காவல்துறையினரின் ஆதரவும் குறிப்பாக தஞ்சாவூர் போக்குவரத்து காவல்துறையின் சிறப்பான பணியும் முக்கிய காரணமாக அமைந்தது என்று தெரிவித்தனர்.தஞ்சாவூர் அபெக்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்களான டாக்டர் சிவசங்கர், டாக்டர் ரவிசங்கர், டாக்டர் ஆஷிக் மற்றும் அவர்களது குழுவினர், சென்னையின் ரேலா (Rela) மருத்துவமனை நிபுணர்களுடன் இணைந்து சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். தற்போது பொருத்தப்பட்ட இதயம் சீரான துடிப்புடன் இயங்கத் தொடங்கியுள்ளதாக டாக்டர்கள் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
 
திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இத்தகைய இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதும், ஒருங்கிணைந்த மருத்துவக்குழுவின் செயல்பாடும் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
EV Car Battery: 15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget