ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; தனியார் அறுவடை இயந்திரங்கள் வாடகை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம்
தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2500எனவும், டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1750 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
![ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; தனியார் அறுவடை இயந்திரங்கள் வாடகை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம் ABP Nadu Impact Meeting to fix rent of private harvesting machines in response to ABP NADU News TNN ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; தனியார் அறுவடை இயந்திரங்கள் வாடகை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/28/3cff0a67ddbd6b9fbc02992c4620ab3d1738043971226733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: மழையால் பாதிப்பு, பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல் அறுவடைக்கான இயந்திரங்கள் வாடகை அதிகம் இருந்ததால் வேதனையடைந்தனர். இதுகுறித்த செய்தி ஏபிபிநாடு-ல் வெளியான நிலையில் இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை தொகையினை முத்தரப்பு கூட்டம் வாயிலாக நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட கலெக்டர் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் அடிப்படையில் பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2500எனவும், டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1750 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து கொண்டு அறுவடை இயந்திர உரிமையாளர்கள் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வாடகையினை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்தால், புகார் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண். தஞ்சாவூர், செயற்பொறியாளர் (வே.பொ) எண். 94436 78621, தஞ்சாவூர், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 63838 30644, கும்பகோணம், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 63838 30644. பட்டுக்கோட்டை. உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 99761 93110 மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எண். 94436 86754 என்ற எண்களில் புகார் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக மேற்காணும் அலுவலர்களுக்கு பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் தங்களுடைய புகார் மனுக்களை நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அளித்திடலாம்.
மேலும் வேளாண்மைப் பொறியியல் துறையின் பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1880 எனவும், டயர் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 என்ற வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே தனியார் இயந்திரங்கள் மட்டுமின்றி வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களையும் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)