மேலும் அறிய

சிலம்பம் சுற்றுவதில் சாதனை படைக்கும் தஞ்சை அரசர் தொடக்கப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி

ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஆசிரியர்கள்தான். அவை கற்று தரும் பாடங்கள் பட்டைத் தீட்டிய வைரமாக நம்மை மாற்றும்.

ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஆசிரியர்கள்தான். அவை கற்று தரும் பாடங்கள் பட்டைத் தீட்டிய வைரமாக நம்மை மாற்றும். தோல்வியை எப்போது மனதார ஏற்றுக்கொண்டு அதில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள முயல்கிறோமோ அப்போதே வெற்றி நம்மை நோக்கி ஓடி வரும். 

எதிர்கால வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் முயற்சி என்ற தூண்டுகோல்தான் உள்ளது.  மேற்கொள்ளும் செயல்களிலும் பொறுமை இழக்காமல் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டால், சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக மாறும். அதுபோல்தான் தஞ்சாவூர் அரசர் தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி சிலம்பத்தில் அசர அடிக்கும் சாதனைகள் செய்து மலைக்க வைத்துள்ளார்.

மாணவியின் அம்மா அபிராமி. அப்பா கார்த்திக். கடந்த 2 ஆண்டுகளாக சிலம்பம் கற்று வரும் மாணவி திவ்யதர்ஷினியின் சிலம்ப பயிற்சியாளர் ராஜராஜ சோழன்  சிலம்பம் போர்க்கலை பாசறை ஆசான் அருண். மாணவியின் கரங்களில் சுற்றும் சிலம்பத்தின் வேகம் அசாத்தியமாக உள்ளது. திடமான மனதிருந்தால் சாதனைகள் பல படைக்கலாம். அது மாணவி திவ்யதர்ஷினியிடம் நிறைய உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தஞ்சையில் மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் தன் பக்கம் பார்க்க வைத்தார்.

அதேபோல் கோவையில் மாநில அளவில் நடந்த சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து விருதும், சான்றிதழும் பெற்று அசத்தி உள்ளார்.

சிலம்பம் சுற்றுவதில் சாதனை படைக்கும் தஞ்சை அரசர் தொடக்கப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி

சிறுவயதில் சாதனை படைப்பது என்பது சிகரம் ஏறி வெற்றிக் கொடி நாட்டுவதற்கு சமம். அதுபோல்தான் சிலம்பத்தில் அபார சாதனை செய்வது மட்டுமல்ல. படிப்பிலும் நான் கெட்டி என்பது போல் 2022-2023 பருவத் தேர்வில் பள்ளியில் முதல்நிலை பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். தஞ்சையில் பொது நூலகத்துறை நடத்திய கோடை கால கொண்டாட்டம் விழாவில் சிலம்பம் செய்து காட்டி சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த சாதனைகளுக்கு எல்லாம் வைர கிரீடம் வைப்பது போல் புதுச்சேரியில் இடைவெளியின்றி ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரிக்காட்ஸில் இடம் பிடித்து தன் பள்ளிக்கு பெரிய பெருமையை தேடி தந்துள்ளார்.
 
கண்களை கட்டிக் கொண்டு நடப்பதே சிரமம். ஆனால் மாணவி திவ்யதர்ஷினி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடந்த சிலம்பம் போட்டியில் கண்ணை கட்டியபடியே 15 நிமிடம் சிலம்பம் சுற்றி கோப்பை மற்றும் விருதை பெற்று சாதித்துள்ளார். இதேபோல் கோவையில் மாயன் வீர கலைக்கூடம் நடத்திய மாநில அளவில் மாவட்டங்களுக்கு மத்தியிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்று விருதும், சான்றிதழும் பெற்றுள்ளார் மாணவி திவ்யதர்ஷினி. 

மாணவியின் வெற்றிகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் குமார் கூறுகையில், படிப்பு, விளையாட்டு என்று எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வருகின்றனர். அரசு பள்ளியா? என்று நினைத்த பெற்றோர்கள் கூட இன்று அரசு பள்ளியில்தான் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்போடு பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெற்று வரும் வெற்றிக்கனிதான் இதற்கு காரணம். எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் வெற்றிகளுக்கு ஆசிரிய, ஆசிரியைகள் உறுதுணையாக நிற்கிறோம்.

படிப்பிலும் கெட்டி என்று எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் நிரூபித்து வருகின்றனர். இது எங்கள் பள்ளிக்கு பெரிய பெருமையை சேர்த்து வருகிறது. மாணவர்களின் உயர்வை கண்டு மன திருப்தியுடன் ஆசிரியப்பணியை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Embed widget