மேலும் அறிய
Advertisement
75th Republic Day: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
நிகழ்ச்சியில் 129 பயனாளிகளுக்கு ரூ.3.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
தஞ்சாவூர்: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தேசிய கொடியேற்றினார். விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தேசியக் கொடியேற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 56 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் 24 பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் 129 பயனாளிகளுக்கு ரூ.3.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
குடியரசு தினவிழாவை ஒட்டி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி (நீலகிரி), மாரியம்மன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சை கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்திய குழந்தைகள் நல சங்கமாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சியில் டிஐஜி ஜியாவுல் ஹக் , எஸ்.பி., ஆஷிஷ் ராவத்,கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண்.ராமநாதன் தேசியக் கொடியேற்றினார். ஆணையர் மகேஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வல்லம்: வல்லம் பேரூராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவில் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் தேசியக் கொடியேற்றினார். முன்னதாக மகாத்மா காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செயல் அலுவலர் கணேசன், கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் ஊராட்சித் தலைவர் ஓ.கே.சுப்பையா தேசியக் கொடியேற்றினார். துணைத் தலைவர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் பவுல்தாஸ், திமுக ஒன்றிய பிரதிநிதி
அமைதி குணசேகரன், ஊராட்சி முன்னாள் செயலாளர் புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion