மேலும் அறிய

தஞ்சாவூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் - இலக்கு ஒரு லட்சம் ஆனால் போடப்பட்டதோ 85 ஆயிரம்

’’5ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் 85,328 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக 66 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 48 பேர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர்.  இது வரை 938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்றது. இம்முகாமிற்காக 1.34 லட்சம் டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள்  வரவழைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை  57 சவீதம் பேர்  முதல் தவணை தடுப்பூசியும், 17 சதவீதம் பேர்  இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு 56.5 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 66 சதவீதம் பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் - இலக்கு ஒரு லட்சம் ஆனால் போடப்பட்டதோ 85 ஆயிரம்

தடுப்பூசி முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தில்  கிராமப்புற பகுதிகளில் 721 இடங்களிலும், நகர்ப்புற பகுதிகளில் 119 இடங்களிலும் என மொத்தம் 840 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 3,360 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிராமப்புறங்களில் பொது மக்கள் அதிக அளவில் வராததால், 85,328 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார துறையினர் காலை முதல் மதியம் வரை இலக்கினை எட்டி விடுவார்கள். ஆனால் மாலை வரை இலக்கினை எட்டாததால், முகாமில் உள்ள சுகாரத்துறையினர், அப்பகுதியிலுள்ளவர்களிடம் கெஞ்சியபடி, தடுப்பூசி செலுத்த வேண்டி கேட்டனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு இன்னமும் போதுமான விழிப்புணர்வு ஏற்படாததால், பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வரவில்லை. இதனால் மாலை 7 மணி வரை முகாமிலேயே, பொது மக்கள் யாராவது தடுப்பூசி செலுத்தி கொள்ள வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், கும்பகோணத்தில் நடைபெற்ற முகாமில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன், கொரோனா வைரஸ் போன்று உருவத்தில், கும்பகோணத்திலுள்ள மக்கள் கூடும் இடங்கள், வணிக நிறுவனங்கள் , பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களிடம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என நுாதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் 4513 பேரும், பூதலுார் வட்டாரத்தில் 4767 பேரும், கும்பகோணம் வட்டாரத்தில் 14672  பேரும், மதுக்கூர் வட்டாரத்தில் 3251 பேரும, ஒரத்தநாடு வட்டாரத்தில்  4838 பேரும், பாபநாசம் வட்டாரத்தில் 4077 பேரும், பட்டுக்கோட்டைவட்டாரத்தில் 8969 பேரும், பேராவூரணி வட்டாரத்தில் 5417 பேரும், சேதுபாவசத்திரம் வட்டாரத்தில் 5417 பேரும், தஞ்சாவூர் வட்டாரத்தில் 15945 பேரும், திருப்பனந்தாள் வட்டாரத்தில் 4200 பேரும், திருவையாறு வட்டாரத்தில் 3720 பேரும், திருவிடைமருதுார் வட்டாரத்தில் 5685 பேரும், திருவோணம் வட்டாரத்தில் 2602 பேரும் என மொத்தம் 84328 பேர் தடுப்பூசி செலத்தி கொண்டுள்ளனர். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget