மேலும் அறிய
Advertisement
நாகப்பட்டினத்தில் இவ்வாண்டு மட்டும் கடலில் விடப்பட்ட 59,000 ஆலிவ் ரெட்லி ஆமைக்குஞ்சுகள்
கடந்த 1972 ஆம் ஆண்டு கடற்கரையோரம் 9 இடங்களில் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் செயற்கையான முறையில் பொரிப்பகம் அமைக்கப்பட்டது
உலக அளவில் அழியும் தருவாயில் இருக்கும் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை தமிழக வனத்துறை சார்பில் ஆமை குஞ்சுகள் பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் இவ்வாண்டு 59 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது. நீண்ட கிழக்கு கடற்கரை கொண்ட ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக அளவில் அழியும் தருவாயில் இருக்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 1972 ஆம் ஆண்டு கடற்கரையோரம் 9 இடங்களில் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் செயற்கையான முறையில் பொரிப்பகம் அமைக்கப்பட்டது.
50 வயது முதல் 70 வயது வரை ஆயில் காலம் கொண்ட ஆலிவ் ரெட்லி ஆமைகள் தமிழக கடற்கரை பகுதிகளில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு ஒரு ஆமை 80 முதல் 170 முட்டைகளை இட்டுச் செல்கிறது. இதனை ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆமை குஞ்சுகள் பொரிப்பாகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று ஆமை குஞ்சுகள் வந்தவுடன் குறிப்பிட்ட காலத்தில் கடலில் விட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக நாகப்பட்டினம் அடுத்த சாமந்தான் பேட்டை ஆமை குஞ்சுகள் பொரிப்பத்தில் பாதுகாக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று கடலில் ஆமை குஞ்சுகள் ஏதுவாக நீந்தி செல்லும் வகையில் கடலில் விட்டார். ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் இவ்வாண்டு 59 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion