மேலும் அறிய

11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - காரணமான இளைஞர் போக்சோவில் கைது

வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும், காதலனும் திருமணம் செய்ய மறுத்து விட்டார், பெற்றோர்களும் திட்டுகிறார்கள் என்று மனமுடைந்த மாணவி வீட்டிலிருந்து பூச்சிக்கொல்லி  விஷ மருந்து குடித்தார்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது காதலியான +1 படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில், திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். தங்களது மகள் திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்ததை அறிந்து பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த அச்சிறுமி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்கா,  வளப்பக்குடியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (27). டாடா மினி வேன் சொந்தமாக  டிரைவராக உள்ளார். சாமிநாதன், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான 16 வயது சிறுமி, அடிக்கடி அவர்களது வீட்டிற்கு சென்று வரும் நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளார்.

திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +1 படித்துவரும் மாணவியை, அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என உறுதி மொழி அளித்தார். சாமிநாதன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறியதை நம்பி, மாணவி, சாமிநாதனுடன் நெருங்கி  பழகியுள்ளார். காதல் விஷயம் பெற்றோர்களுக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும், அதனால் இருவரும் சந்திப்பை தவிர்த்து கொள்ளலாம் என மாணவி கூறியுள்ளார். மேலும்  நான் படித்து கொண்டிருக்கின்றேன், படித்த முடித்த பிறகு காதலை பற்றி பேசிக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு சாமிநாதன், மாணவியிடம், உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சாமிநாதனின் வாக்குறுதியை நம்பிய மாணவியும், சாமிநாதனும் அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.  அதன் விளைவாக மாணவி, 3 மாத கர்ப்பிணி ஆனார்.

11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - காரணமான இளைஞர் போக்சோவில் கைது

இதுபற்றி அறிந்த சாமிநாதன், 18 வயது பூர்த்தி அடையாததால் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது, 18 வயது பூர்த்தியடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற காரணம் காட்டி அச்சிறுமியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.அம்மாணவி, தான் கர்ப்பம் தரித்துள்ள தகவலை தனது பெற்றோரிடம் கூறாமல் இத்தனை நாட்களும் மறைத்து வந்துள்ளார்.  இந்நிலையில், தங்களது மகளின் உடலில் மாறுபாடு ஏற்பட்டதையறிந்த அறிந்த மாணவியின் பெற்றோர்கள், விசாரித்த போது, தனது திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்து மாணவியின் பெற்றோர்கள் அதிரிச்சியடைந்து திட்டியுள்ளனர். வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும், காதலனும் திருமணம் செய்ய மறுத்து விட்டார், பெற்றோர்களும் திட்டுகிறார்கள் என்று மனமுடைந்த மாணவி வீட்டிலிருந்து பூச்சிக்கொல்லி  விஷ மருந்து குடித்தார்.

11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - காரணமான இளைஞர் போக்சோவில் கைது

அம்மாணவி தான்  தற்கொலை செய்து கொள்ள விஷமருந்திய  தகவலை பெற்றோர்களிடம் கூறியதற்கு பிறகு, அருகிலுள்ளவர்கள், அம்மாணவியை உடனடியாக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையிலுள்ள கர்ப்பிணியான மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுபற்றிய புகாரின்பேரில், திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அச்சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான சாமிநாதனை கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget