மேலும் அறிய

ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது: 24 மணிநேரமும் கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

தெற்கு ரயில்வேயில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி ஜங்ஷன், தினமும் 50,000க்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாள்கிறது.

தஞ்சாவூர்: சூப்பர் ஏற்பாடு... திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் திருச்சி ஜங்ஷனுக்கு வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். பயணிகளிடம் இருந்து பொருட்கள் திருட்டு போன்றவையும் தடுக்க முடியும்.

தெற்கு ரயில்வேயில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி ஜங்ஷன், தினமும் 50,000க்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாள்கிறது. காலை முதல் இரவு வரை எப்போதும் மக்கள் மற்றும் பயணிகள் நிறைந்து காணப்படும் ரயில்வே ஜங்ஷன் இது என்றால் மிகையில்லை. முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொலைதூர ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால் எப்போதும் வெளி மாவட்டத்தில் இருந்தும், இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிகள் இங்கு செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள பழைய கண்காணிப்பு கேமராக்களுக்கு பதிலாக தற்போது நிறுவப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு அமைப்பை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய துல்லியமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது: 24 மணிநேரமும் கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

திருச்சி ரயில்வே கோட்டம், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கிய பகுதிகளை தெளிவாக கண்காணிக்கவும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்யவும் ஒரு அதிநவீன வீடியோ கண்காணிப்பு அமைப்பை நிறுவியுள்ளது. இந்த புதிய அமைப்பை ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகி தொடங்கி வைத்தார். அவர், புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டு, கண்காணிப்பு வலையமைப்பு முழுமையாக செயல்படுகிறதா என்பதையும் உறுதி செய்தார்.

சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு, பழைய சிசிடிவி அமைப்புகளை மாற்றி, இந்த புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ரயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்கள், காத்திருப்பு அறைகள், முன்பதிவு கவுண்டர்கள், வாகன நிறுத்துமிடங்கள், நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, ரயில்வே யார்டுகள், முக்கிய நுழைவாயில், கூடுதல் நுழைவாயில்கள் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் அனைத்து முக்கிய பகுதிகளிலும் மொத்தம் 185 உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் திருச்சி ஜங்ஷன் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. இங்கு வரும் பயணிகள் மற்றும் உறவினர்களை அனுப்பி வைக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் ரூ.2.26 கோடி செலவில் இந்த புதிய ஐபி-அடிப்படையிலான (IP-based) அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது பழைய சிசிடிவி நெட்வொர்க்கை விட மிக விரிவான மற்றும் கூர்மையான காட்சிகளை வழங்குகிறது. இதில் முழு ஹெச்.டி. மற்றும் அல்ட்ரா ஹெச்.டி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, பிரத்யேக கட்டுப்பாட்டு அறையில் உள்ள பெரிய திரைகளில் காட்சிகள் காண்பிக்கப்படும்.

இந்த அதிநவீன வசதி, பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும். திருட்டு, துன்புறுத்தல், சங்கிலி பறிப்பு, அனுமதியின்றி நுழைதல் போன்ற சம்பவங்களை ரயில் நிலைய வளாகத்தில் எங்கு நடந்தாலும் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இது உதவும். இது பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Embed widget