மேலும் அறிய

தஞ்சையில் பங்கு சந்தையில் லாபம் பார்க்கலாம் எனக் கூறி இளைஞரிடம் 20 லட்சம் அபேஸ்

நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வருபவர்களின் ஆவணங்களுக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடியை 54 லட்சத்து 50 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை பாலாஜி நகரை சேர்ந்தவர் அம்பேத்கர் (38). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவலால் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன் பிறகு அவர்  வெளிநாடு செல்லவில்லை. இந்நிலையில் தஞ்சை ஈஸ்வரி நகர், விக்டோரியா காலனியை சேர்ந்த நண்பரான அருண்குமார் என்பவர்,  நான் கூறும் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம் என அம்பேத்கரிடம் ஆசை வார்த்தை கூறினார். அதன்படி தான் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில், அம்பேத்கர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.27 லட்சம் அருண்குமார் மனைவி கார்த்திகா, அவரது சகோதரி ஆகியோரின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இதில் ரூ.7 லட்சம் மட்டும் அம்பேத்கருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election 2022 | எம்.பி. பதவியை விட கவுன்சிலர் பதவிதான் முக்கியம் - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

தஞ்சையில் பங்கு சந்தையில்  லாபம் பார்க்கலாம் எனக் கூறி இளைஞரிடம் 20 லட்சம் அபேஸ்

பல நாட்களாக மீதி பணம் கொடுக்கப்பட வில்லை. பல முறை அருண்குமாரிடம் பணம் கேட்டு பார்த்தார். பணம் தராததால், சந்தேகமடைந்த அம்பேத்கர், தான் ஏமாற்றப் பட்டோம் என்பதை உணர்ந்த அம்பேத்கர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி வழக்கு பதிவு செய்து அருண்குமார், அவரது மனைவி கார்த்திகா ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.இதே போல், தஞ்சையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேனேஜர் ஆக உள்ளார். இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | கடைசி நாள் பரப்புரையிலும் காணாமல் போன தேமுதிக - திருவண்ணமலையில் 273 பதவிகளில் 18 இடங்களில் மட்டுமே போட்டி

தஞ்சையில் பங்கு சந்தையில்  லாபம் பார்க்கலாம் எனக் கூறி இளைஞரிடம் 20 லட்சம் அபேஸ்

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election: என்னை கொல்ல முயன்றவருக்கு திமுக சீட் கொடுத்துள்ளது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

அதில் கூறியிருப்பதாவது,  எங்களது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கரூர் பகுதியை சேர்ந்த சேல்ஸ் மேனேஜர் மணிகண்டன், புதுக்கோட்டையை சேர்ந்த கமிஷன் ஏஜென்ட் துரைராசு மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று பேர் சேர்ந்து நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வருபவர்களின் ஆவணங்களுக்கு போலி ஆவணம் தயாரித்து சுமார் ரூ.2 கோடியை 54 லட்சத்து 50 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞான சுமதி வழக்கு பதிவு செய்து மணிகண்டன் உள்பட 3 பேரையும் கைது செய்து, வேறு நிறுவனத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றியுள்ளார்களா, இதில் நிறுவனத்திலுள்ள வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என தீவிரமாக  விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாகையில் போலி ஆவணங்கள் மூலம் கோயில் இடத்தை பட்டா மாற்றம் செய்த விஏஓ மீது வழக்கு பதிவு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
Embed widget