டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்... 105 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க
தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் துறையில் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. சூப்பர் வாய்ப்பும் கூட.

தஞ்சாவூர்: மத்திய அரசு நிறுவனத்தில் 105 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க. டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ். மிஸ் பண்ணிடாதீங்க. முழு விபரம் உள்ளே.
இந்தியாவின் மிக முக்கிய கணினி மேம்பாட்டு மையமான Centre for Development of Advanced Computing (C-DAC), தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் துறையில் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. சூப்பர் வாய்ப்பும் கூட. நாடு முழுவதும் உள்ள கிளைகளில், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பணிபுரியும் வாய்ப்புடன், மொத்தம் 105 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மத்திய அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது அக்டோபர் 1, 2025 அன்று தொடங்கி இருக்கு. வரும் 20ம் தேதி கடைசி. எனவே காலதாமதம் செய்யாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த அறிவிப்பில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய பட்டதாரிகள் முதல் அனுபவம் வாய்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பதவிகள் உள்ளன.
• Project Associate (Fresher) பதவிக்கு மொத்தம் 15 காலியிடங்கள் உள்ளன. அவர்களுக்கு ஆண்டுக்கு 3.6 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.
• அனுபவம் வாய்ந்தவர்களுக்கான Project Engineer / PS&O Executive பதவிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான ஆண்டுச் சம்பளம் 4.49 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
• Program/Project Manager/Knowledge Partner பதவிக்கு 5 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிக்கு அதிகபட்சமாக 12.63 லட்சம் முதல் 22.9 லட்சம் ரூபாய் வரை ஆண்டுச் சம்பளம் வழங்கப்படலாம்.
• Project Technician பதவிக்கு அதிகபட்சமாக 50 காலியிடங்கள் உள்ளன. இவர்களுக்கு ஆண்டுக்கு 3.2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
• உயர்ந்த பதவியான Project Technician (Higher Post)-க்கு 10 காலியிடங்கள் உள்ளன. இதன் ஆண்டுச் சம்பளம் 8.49 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
மொத்தம் உள்ள 105 காலியிடங்களில் அதிகபட்சமாக Project Technician பதவிக்கு 50 இடங்கள் உள்ளன. மிக அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.22.9 லட்சம் வரை சம்பளம் பெறும் வாய்ப்பு மேலாண்மை நிலைப் பதவிகளில் உள்ளது.
விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப மாறுபட்ட கல்வித் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான பதவிகளுக்கு BE/B. Tech, ME/M. Tech, அல்லது அறிவியல்/கணினி பயன்பாடுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
• Project Associate/Engineer/Manager போன்ற பதவிகளுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA பெற்றிருக்க வேண்டும்.
• Project Technician பதவிக்கு, சம்பந்தப்பட்ட துறையில் ITI, டிப்ளமோ அல்லது கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பைப் பொறுத்தவரை, Project Associate மற்றும் Project Technician பதவிகளுக்கு 30 வயதுக்கு மேற்படாதவர்கள் விண்ணப்பிக்கலாம். Project Engineer பதவிக்கு 45 வயது வரையிலும், Project Manager போன்ற உயர் பதவிகளுக்கு 56 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணமும் கிடையாது. தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய, தேவைக்கேற்ப எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் பின்பற்றப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், C-DAC-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.cdac.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவுத் தேதி: 01.10.2025 முதல் 20.10.2025 வரை மட்டுமே. விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதி செய்துகொள்ளவும். கடைசி தேதிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. எனவே காலதாமதம் இன்றி உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.





















