மேலும் அறிய

இளைஞர்கள் கவனத்திற்கு... ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி: தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

தனியார் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic training and Dermaplaining training) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தனியார் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic training and Dermaplaining training) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு 8ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரைவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் ஆகும். மேலும் இப்பயிற்சி இராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைப்பெறவுள்ளது இங்கு தங்கு வசதிகள், உணவுகள் உள்பட செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.25,000 வரைவுடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தகுதியான நபர்கள் தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் கவனத்திற்கு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் C மற்றும் D பிரிவு வாய்க்கால் தூர்வாரும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் தவறாது கலந்து கொள்ளுங்கள் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக எதிர்வரும் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான C மற்றும் D பிரிவு வாய்க்கால்களை தூர்வார கருத்துரு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், மாவட்ட ஆட்சியர்  தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 23.02.2026ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் C மற்றும் D பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கிராமங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள C மற்றும் D பிரிவு வாய்க்கால்களின் விவரங்களை இக்கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget