மேலும் அறிய
Advertisement
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வாருங்கள் - தமிழக அரசு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அதனை தடுப்பதற்காக முதல்வர் பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் பல்வேறு உத்தவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
கொரோனாவை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். நிறுவனங்கள் அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion