மேலும் அறிய

இனி NO traffic... கெடிலம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானம் தீவிரம் ; விரைவில் திறப்பு விழா !

கடலூரில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே கூடுதல் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர்: விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் (NH 32) கடலூரில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே கூடுதல் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கெடிலம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானம் பணி தீவிரம்

தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை குறைப்பதற்காக பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால் போன்ற பகுதியில் இருந்து சென்னை செல்ல கடலுார் வழியாக செல்லும் சாலையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் கிழக்கு கடற்கரை சாலையும் 4 வழி சாலையாக மாற்றப்பட்டு வருகின்றது. இதே போன்று, புதுச்சேரி - கடலுார் சாலை மட்டும் 2 வழி சாலையாகவும், சில இடங்களில் ஒரு வழி சாலையாகவும் உள்ளன. அதன் காரணமாக அதிகளவு விபத்து ஏற்பட்டு வருவதால் அனைத்து பகுதிகளிலும் குறைந்தபட்சம் இரு வழி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடலுார் பெண்ணையாற்றில் புதியதாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. கெடிலம் ஆற்றில் அண்ணா மேம்பாலம் என்ற ஒரே பாலம் மட்டுமே பயன்பட்டு வந்தது. இந்நிலையில் 2 பாலம் அவசியம் எனக் கருதி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. அதன்பேரில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு கெடிலம் ஆற்றில் மற்றொரு பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்ட 22.25 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அதன்படி கெடிலம் ஆற்றின் குறுக்கே இருந்த பழைய இரும்பு பாலத்தை இடித்து அகற்றப்பட்டது. பின், அதே இடத்தில் மீண்டும் கடந்த 24.1.2024ம் ஆண்டு பாலம் கட்டுமானப் பணி துவங்கியது. பாலம் கட்டுமானப் பணி துவங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை தரைப்பகுதியில் இருந்து பில்லர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதற்கு மேல்தளம் போடும் பணிக்காக கம்பி கட்டும் பணி நடந்து வருகிறது.

பாலம் கட்டுமான பணி வரும் ஆண்டில் நிறைவடையும்

பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் வரும் ஆண்டிற்குள் கட்டுமானப்பணி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், "நெடுஞ்சாலைகளில் விபத்தை குறைப்பதற்காக போவதற்கு ஒரு பாலமும், வந்து செல்வதற்கு ஒரு பாலமும் என்ற கணக்கில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பாலம் கட்டுமான பணி வரும் ஆண்டில் நிறைவடையும். பாலம் கட்டப்படுவதால் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை அகலப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. தற்போது புதுச்சேரி முள்ளோடை முதல் சிப்காட் புறவழிச்சாலை இணையும் இடம் வரை மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக மஞ்சக்குப்பம் பகுதி சாலையில் ஆக்கிரமிப்புகள் பெரிய அளவில் இல்லை. சொந்தமான கட்டடத்தை ஆர்ஜிதம் செய்து இடித்து அகலப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை" என்றார்.

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget