மேலும் அறிய

Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!

செந்தில் பாலாஜி, அசோக் குமார் இருவரும் முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கியது. இதனால் தலைமறைவாக உள்ளவர்கள் வெளியே வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு முன் ஜாமின் கிடைத்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள இருவரும் வெளியே வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. இதனிடையே பெரும்பான்மை இல்லாத தவெக 5 கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இதனால் இந்த தவெக அரசு அடுத்த 6 மாதங்களில் கவிழ்ந்து விடும். விரைவில் தேர்தல் வரும் என்றெல்லாம் திமுக தொடர்ச்சியாக கூறி வருகிறது. இப்படியான நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். 

இந்த நிலையில் தங்களிடம் பேரம் பேசி திமுகவில் இணையுமாறு சிலர் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக ஊத்தங்கரை மற்றும் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதி திட்டத்துக்குப் பின்னால் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருவர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் இருவரும் ஆஜராகவில்லை. 

கிடைத்தது முன்ஜாமின்

இந்த நிலையில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் இருவரும் முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கியது. இருவரும் தினம்தோறும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலையிலும் மாலையிலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி, அசோக் குமார் இருவரும் வெளியே வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் செந்தில் பாலாஜியை கைது செய்யும் பணியும் ஒரு பக்கம் சத்தமே இல்லாமல் நடந்து வருகிறது. அவர் வேறு ஏதாவது வழக்கில் கைது செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் காத்திருக்கின்றனர். 

Also Read: AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேசுகையில், “ஆட்சியைக் கவிழ்க்க சதி என சொல்லப்பட்டு வந்தாலும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பது என்பது தானாகவே அரசை கவிழ்க்கும் செயலாகாது. காவல்துறை புகாரில் அரசை கவிழ்க்க வேண்டும் என கூறவில்லை என வாதிட்டோம். இதன்பின்னர் அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் அரசை கவிழ்க்கும் சதி என்ற வார்த்தையை நீக்கி விட்டனர். இதனால் முதல் தகவல் அறிக்கை நீர்த்து போனது. திமுக மற்றும் செந்தில் பாலாஜி மீது அரசியல் ரீதியாகக் கலங்கம் விளைவிக்கவே காவல்துறை இந்த வழக்கில் இல்லாத நடைமுறையை செய்துள்ளது என வாதிட்டதாகவும், அதை கருத்தில் கொண்டு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
தமிழகத்தில் 2 நாட்கள் எங்கெல்லாம் கனமழை கொட்டும், சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 2 நாட்கள் எங்கெல்லாம் கனமழை கொட்டும், சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை
காங்கிரஸால் தனியா ஒரு கவுன்சிலராவது ஜெயிக்க முடியுமா?- மாணிக்கம் தாக்கூரை விமர்சித்த அன்புமணி! பின்னணி என்ன?
காங்கிரஸால் தனியா ஒரு கவுன்சிலராவது ஜெயிக்க முடியுமா?- மாணிக்கம் தாக்கூரை விமர்சித்த அன்புமணி! பின்னணி என்ன?
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Embed widget