வெடித்த ஆளுநர் விவகாரம்.. கொச்சையாக பேசிய திமுக பேச்சாளர்.. கொதித்தெழுந்த பா.ஜக.. நடந்தது என்ன?
தமிழக ஆளுநரை சுட்டுக் கொல்ல பயங்கரவாதியை அனுப்புவோம் என திமுக கழகப் பேச்சாளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தமிழக ஆளுநரை சுட்டுக் கொல்ல பயங்கரவாதியை அனுப்புவோம் என திமுக கழகப் பேச்சாளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"We wonder if DMK has terrorist links..." BJP leader on Krishnamoorthy's remarks on Tamil Nadu Guv
— ANI Digital (@ani_digital) January 14, 2023
Read @ANI Story | https://t.co/N4gDE01oWe#DMK #BJP #TamilNadu #RNRavi pic.twitter.com/dgEuLJl8xT
ஆளுநரை திட்ட வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் ஆளுநர் உரையை சரியாகப் படித்திருந்தால், அவரது காலில் பூ வைத்து கைகூப்பி நன்றி தெரிவித்திருப்பேன். ஆனால், அம்பேத்கரின் பெயரைச் சொல்ல மறுத்தால் அவரை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லும் உரிமை எனக்கு இல்லையா? அவருடைய பெயரைச் சொல்ல மறுத்தால், நீங்கள் காஷ்மீருக்குச் செல்லுங்கள். உங்களைச் சுட்டுக் கொல்ல தீவிரவாதியை அனுப்புவோம்,” என்று ஒரு கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கருத்து தொடர்பாக திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவின் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். “திமுகவுக்கு என்ன பயங்கரவாத தொடர்பு இருக்கிறது என்பதை காவல் துறையினர் விசாரிக்க வேண்டும், ஏனென்றால் கவர்னரை காஷ்மீருக்கு அனுப்புவோம், பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்புவோம் என்று அவர் கூறியுள்ளார். நாம் யார் என்று அர்த்தம்? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மட்டும் இப்படி தகாத வார்த்தையில் பேசவில்லை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆசியுடன், திமுக செயல்தலைவரின் தூண்டுதலின் பேரில்தான் இவை நடக்கின்றன என்று நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தமிழக காவல்துறைக்கு முதுகெலும்பு இருந்தால், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.பாரதி ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும். குண்டர் சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க வேண்டும்,'' என நாராயணன் திருப்பதி கூறினார்.
இதற்கிடையே ஜனவரி 9 நடப்பாண்டின் தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார்.
அதேபோல, தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமலும் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசினர். ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், ஆளுநருக்கு அறிவுரை வழங்குமாறு குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்களவை எம்.பி.க்கள் ஆர். ராசா, டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை எம்.பி. என்.ஆர். இளங்கோ சென்றது குறிப்பிடத்தக்கது.