மேலும் அறிய
Advertisement
சிறுவன் மரண வழக்கில் தொடர்புடைய காவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி
வழக்கு தொடர்பாகவும், வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை, கோச்சடையைச் சேர்ந்த ஜெயா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக என் மகன் முத்து கார்த்திக்கை, கடந்த 2019ஆம் ஆண்டு எஸ்.எஸ்.காலனி போலீசார் என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், அழைத்துச்சென்ற நிலையில், சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்துள்ளனர். போலீசார், என் மகனை கடுமையாக தாக்கியதில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற என்மகன் கடந்த 2019 ஜனவரி 24ஆம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கை ஏற்கனவே நீதிமன்றம் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. போலீசார் என் மகனை சட்டவிரோத காவலில் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இறந்துள்ளார்.
எனவே, எனது மகனின் இறப்பிற்கு காரணமான எஸ்.எஸ். காலனி காவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் முதற்கட்ட அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அறிக்கை கிடைக்க பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நீதிபதி," வழக்கு தொடர்பாகவும், வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தாலும் 2-வது மனைவிக்கு பணப்பலன் பெற உரிமை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை
உத்தமபாளையத்தில் கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து 2013-ல் ஓய்வு பெற்றவர் முத்து மாடசாமி. இவரது முதல் மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 1985-ல் திருமணம் நடைபெற்றது. தமிழ்ச்செல்வி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் அவரது சகோதரி கவிதாவை முத் துமாடசாமி 1994-ல் திருமணம் செய்து கொண்டார். 1996-ல் தமிழ்ச் செல்வி இறந்தார்.
இந்நிலையில் 2-வது மனைவி கவிதாவுக்கு குடும்ப ஓய்வூ தியம் கிடைக்கும் வகையில் பணிப்பதிவேட்டில் தனது சட்டப் பூர்வ வாரிசாக குறிப்பிடக்கோரி முத்துமாடசாமி மனு அளித்தார். அவரது மனுவை தமிழக கணக்காயர் ஜெனரல் நிராகரித்து 22.12.2021-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, 2வது மனைவியை சட்டப்பூர்வ வாரிசாக குறிப்பிட உத்தரவிடக்கோரி முத்துமாடசாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "அரசு ஊழியர்கள் நடத்தை விதிப்படி அரசு ஊழியர் ஒருவர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடி யாது. இது நடத்தை விதிமீறல் மட்டும் அல்ல, தண்டனைக்குரிய குற்றமும்கூட. மனுதாரரின் 2-வது திருமணம் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. மனுதாரர் முதல் மனைவி உயி ருடன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்துள்ளார். இதற் காக மனுதாரர் மீது அவர் பணியில் இருக்கும்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசு ஊழியரின் ஒழுக்கக்கேடான நட வடிக்கையே அவரை தண்டிக்க போதுமானது.
ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் மீது நடத்தை மீறல் தொடர்பாக ஓய்வூதிய விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கலாம். முதல் மனைவி சம்மதத்துடன் 2-வது திருமணம் செய்து கொண்டதாக மனு தாரர் தெரிவித்துள்ளார். அப்படி யிருந்தாலும் 2-வது திருமணம் சட்டவிரோதம்தான். அதனால் அரசு ஊழியர்களின் பணப்பலன்களை பெற 2-வது மனைவிக்கு உரிமை கிடையாது. 2-வது மனைவியை பணிப்பதிவேட்டில் சட்டப்பூர்வ வாரிசாக நியமிக்கும் கோரிக் கையை ஏற்கக்கூடாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது." என உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தேர்தல் 2024
காஞ்சிபுரம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion