காகம் தலை மீது வட்டமிட்டால் என்ன அர்த்தம்..?
வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது ஒரு சில பறவைகளை பார்த்தால் அவை எந்த திசையில் நமக்கு தென்படுகிறது.. ஏதேனும் சத்தமிடுகிறதா…

விலங்குகளுக்கு என்று பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற ஒரு சாஸ்திரம் உண்டு . அவை பறவைகளை வைத்து ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் சகுனங்களோ நிமித்தங்களோ கணிக்கப்படுகிறது... இவை சித்தர்களால் மிக ஆழமாக எழுதப்பட்டது… இன்னும் சொல்லப்போனால் மற்ற சாஸ்திரங்களைப் போலவே பஞ்சபட்சி சாஸ்திரத்திற்கும் ஒரு பெரிய வருவது உரைத்தல் கூறும் சக்தி உள்ளது புறா காகம் கழுகு குயில் மயில் என்று எந்த பறவையை வைத்தும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கணிக்க முடியும்…
வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது ஒரு சில பறவைகளை பார்த்தால் அவை எந்த திசையில் நமக்கு தென்படுகிறது.. ஏதேனும் சத்தமிடுகிறதா… நம்மை பின் தொடர்கிறதா, நாம் செல்லும் காரியத்திற்கு அபசகுனமாக ஏதேனும் செய்கிறதா, அல்லது செய்வது போல தோன்றுகிறதா? இவை அனைத்தையும் வைத்து பட்சி சாஸ்திரத்தை மிக எளிதாக கூறி விடலாம் அவை நூற்றுக்கு நூறு அப்படியே நடைமுறைக்கு சரியாக வருகிறது…
காகம் தலைக்கு மேல் வட்டமிட்டால்..?
காகம் பொதுவாக சனியின் அம்சத்தை கொண்டது கருமை நிறம், தாமத குணம் ஒரு காகம் உணவை பார்த்து விட்டால் கரைந்து மற்ற காகங்களையும் உணவருந்து அழைக்கும். இப்படியான நல்ல குணத்தை கொண்டது. ஆனால் புறாவை வீட்டில் வளர்ப்பது போல காகத்தை வளர்க்க முடியாது அப்படி காகத்தை வளர்த்தால் என்ன நேர்மோ என்ற அச்சமும் நம்மில் பலருக்கு தோன்றும்…
சிலரை குறி பார்த்து காகங்கள் தலை மீது தட்டுவதும், தோள் மீது தட்டுவதும் மார்பில் உதைத்து விட்டு செல்வதுமாக பார்த்திருப்போம், அப்படியான சந்தர்ப்பங்களில் சனி அவரோடு இருக்க விரும்புகிறார், அவரிடம் பிடித்திருக்கின்ற தோஷங்களை எடுக்க விரும்புகிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு பொருளோ அல்லது உயிருடன் இருக்கும் விலங்குகள், மனிதர்கள் பரப்பன, ஊர்வன என்று எவை எடுத்துக் கொண்டாலும் அவை நம்மை நோக்கி வருமாயின்… அந்த சக்தி நமக்கு உதவ முற்படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.. உங்கள் ஜாதகப்படி அந்த சக்தி நன்மையா? தீமையா என்றும் பார்க்க வேண்டும் அந்த சக்தி உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு எதிரி என்றால்? தீமை நடைபெறும்… அந்த சக்தி உங்கள் ஜாதகத்துக்கு நன்மை என்றால் நன்மை நடைபெறும்…
சனி நீச்சமானால் காகத்திற்கு உணவு வைக்க சொல்வார்கள் ஏற்கனவே அவருடைய உடம்பில் சனியின் தன்மை இல்லாமல் போய் விடுகிறது… இப்படியான சூழ்நிலையில் வெளியில் இருந்து சனி அம்சம் கொண்ட காகத்தை அவர்கள் வரவழைத்து உணவு வைப்பதன் மூலமாக விமோசனம் கிடைக்குமா என்றால் நிச்சயமாக தீர்வு உண்டு… எப்படி என்றால் 10 லட்சம் ரூபாய் இழக்க கூடிய இடத்தில் ஒரு லட்சம் ரூபாயை அவர்கள் இழக்கலாம்… பெரிய அடியாய் வாங்குவதற்கு பதிலாக சிறிய அடியாக வாங்கலாம்…
காகம் தலைக்கு மேல் வட்டமிடுகிறது என்றால் நல்ல சகுனம் தான்… காகத்தை பொறுத்தவரை லாபமான இடத்தில் தான் இருக்கும் தேவையற்ற இடங்களில் அவை இருக்காது குறிப்பாக மழை வருவதை முன்கூட்டியே உணர்ந்து காகங்கள் இடம் பெயரும்… உணவு தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி பயணிக்கும்… நீங்கள் பகலில் காகங்கள் மரத்தின் மீது… எலக்ட்ரிகல் வயரின் மீதும்… அமர்ந்திருப்பதை பார்க்கலாம்… அவை விடுத்து உங்கள் தலைக்கு மேல் வட்டமிடுவதும்… உங்களை சீண்டுவதும்… அல்லது உங்களைக் கடந்து மிகத் தாழ பறந்து செல்வது போல தென்பட்டால் சனீஸ்வரன் உங்களை நோக்கி வருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்… அவை நல்லது சனி பகவான் உங்களை நோக்கி வந்தாலே உங்கள் வாழ்க்கையில் இருக்கிற கஷ்டங்கள் தீர்ந்து விடும்… உங்களுக்கான அதிர்ஷ்டசாலியே சனி பகவான் தான் சனியின் கடைக்கண் பார்வை பார்த்தால் போதும்… உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற அத்தனை பிரச்சினைகளும் ஓடிவிடும்… அவர் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்… இப்படியாக சனி அம்சத்தை காகத்தோடு ஒப்பிட்டு காகம் தலைக்கு மேல் வட்டமிடுவது மிக சுப காரியம்… நல்லதையே கொண்டு வருவார்…





















