மக்களே உஷார்...19 மாவட்டங்களில் 100ஐ தாண்டும் வெயில்!
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் நாளை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்பமானது 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ள்து.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இந்த தருணத்தில் 25-04-2025 மற்றும் 26-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-04-2025 முதல் 01-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25-04-2025 முதல் 27-04-2025 வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதனை தொடர்ந்து 28-04-2025 மற்றும் 29-04-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
25-04-2025 மற்றும் 26-04-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தழகம், ைவமற்ம்காைரக்கால் பகக்கான னசரி வானிைல அக்ைகhttps://t.co/467dVuULiL pic.twitter.com/cZtoMOtZTv
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 25, 2025
19 மாவட்டங்களில் 100ஐ தாண்டும் வெப்பம்:
தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், பெரம்பலூர்,அரியலூர், மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர்,நாமக்கல், மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் நாளை வெப்பமானது அதிகபட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்ட வாய்ப்பு உள்ளதாக என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (25-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று (25-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















