TN Rain Alert: ‛எல்லாரும் ரெடியா இருங்க... கனமழை தொடரும்...’ - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தீவிர கனமழை பெய்யும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று நாட்களும் கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ள மாவட்டங்கள்
கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதே வேளை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி,ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல்,
உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Weather forecast for next 7 days-Chennai pic.twitter.com/5sef46Bm74
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 4, 2022
நாளையும் தொடரும் கனமழை
நாளை கோவை, தேனி, திண்டுக்கல்,ஈரோடு, தருமபுரி,சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், குற்றால அருவிகளில் குளிக்க 4ஆவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | மேட்டூர் அணையில் இருந்து 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காவிரியில் தண்ணீர் திறப்புhttps://t.co/wupaoCQKa2 | #MetturDam #Mettur pic.twitter.com/osTDXmArby
— ABP Nadu (@abpnadu) August 4, 2022
முன்னதாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரள மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று கேரள மாநில அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் இளைஞர்கள் செல்பி எடுக்கும் மோகத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்