Weather Update: குடை எடுத்துட்டு போங்க... இன்று மழை கொட்டும் பகுதிகள் இது தான்!
கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 22-ந் தேதி திருச்சி, மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 23-ந் தேதி உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி- ஆச்சர்யத்தில் அரசு அதிகாரிகள்...!
நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும் ஒட்டியிருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாகவும் ஒட்டியிருக்கும்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் இரவு, மாலை மற்றும் காலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் சற்றே தணிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடி ; அகரத்தில் கிடைத்த சுடுமண் முத்திரை.. மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்த அமைச்சர்..!