ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை முதலில் வரவேற்கத்தான் செய்தோம்- சீமான்...!
’’ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை நாங்கள் முதலில் வரவேற்கதான் செய்தோம். தற்போது பெண்கள் துன்புறுத்துவது, தொடுவது போன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’’
மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ராணுவம், தொடர்வண்டி, மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டால் அரசு எதை நிர்வகிக்கும். இதை முழுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். இந்த கொள்கையை அதிமுக, பாஜக கூட்டணியில் இருப்பதால் வேறு வழியில்லாமல் ஆதரிக்கிறது.
மத்திய அரசு, சிறுகுறு தொழில்கள், விவசாயிகளுக்கு உதவி செய்வது போல் கடன் உதவி வழங்கிறது. ஆனால் அந்த கடன்களுக்கு வட்டி பெற்று கொள்கிறது. கந்துவட்டிக்காரன் கூட கடன் உதவி வழங்குவான். இது ஏற்றுக்கொள்ளமுடியாது. இழப்பில் இருந்த வங்கிகளை அரசு அரசுடமையாக்கியது. ஆனால் லாபத்தில் இருந்த எல்ஐசி நிறுவனத்தை தனியார்க்கு எதற்கு கொடுக்க வேண்டும். அதானி ஃபாம், அதானி ஏர்போட், அதானி குவாட்ரஸ், அதானி துறைமுகம் போல ஐந்து ஆண்டுகளில் இந்தியாவும் அதானி இந்தியாவாக மாறிவிடும். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டியல் இன எழுத்தாளரின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு மக்களை மனிதர்களாக மதிக்காத நாடு இது. நாட்டின் முதல் குடிமகனான ராம்நாத்கோவிந்த் அவர்களை கோவில் உள்ளே அனுமதிக்கவில்லை. வாசலில் நின்று பூஜை செய்து சென்றார். இந்த நிலைதான் இருந்து வருகிறது.
இந்தியா எதை நோக்கியும் செல்லாது. ஏன் என்றால் பணமே செல்லாது. இது வேடிக்கையான நாடு. இதை நான் கூறினால் என்னை ஆண்டி இண்டியன், தேச துரோகி என்று கூறுவார்கள். ஏற்கனவே என் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. தேசத்தை நாசமாக்கி விற்பவன் இன்று தலைவன் என்ற கொடுமை நடந்துகொண்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை நாங்கள் முதலில் வரவேற்கதான் செய்தோம். தற்போது பெண்கள் துன்புறுத்துவது, தொடுவது போன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலக அரசியல் பார்வை, புரிதல் இல்லாத குழுவாக உள்ளது தாலிபான் அமைப்பு.
அவர்கள் செயல்பாடு பொறுத்திருந்து தான் தெரியவரும். ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக தொடங்கப்பட்டது என்பது ஒரு போக்கை. இந்த ஆலை திரவ வடிவத்தில் உள்ள பொருள்களை மட்டும் உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கூட அப்போது விமர்சனம் செய்தனர். ஆனால் விடாப்பிடியாக அதானி உள்ளிட்ட முதலாளிக்கு ஆதரவாக செயல்படுகிறது. மீத்தேன், ஈத்தேன் எடுப்பதற்கு பல ஒப்பந்தங்களை அதானி, அம்பானி, வேதாந்தா நிறுவங்களுக்கு கொடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மனு கொடுக்க வந்த 15 நபர்களை சுட்டுக்கொன்றது அரசு. அரசு தாமிர தட்டுப்பாட்டை பற்றி கவலைப்படாமல் தண்ணீர் தட்டுபாட்டை பற்றி கவலை பட வேண்டும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும் என்றார்.