அனுமதிக்கப்பட்ட நேரங்களில்கூட கூட்டம் சேராதீர்கள், ஒத்துழையுங்கள் - சுகாதாரச் செயலர் வேண்டுகோள்

தமிழக மக்கள் ஊரடங்கை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US: 

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தினசரி 30 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழக அரசு விதித்த ஊரடங்கு காரணமாக, கொரோனா பரவலின் எண்ணிக்கை ஓரளவு குறைந்து வந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழப்பை தடுப்பதற்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.அனுமதிக்கப்பட்ட நேரங்களில்கூட கூட்டம் சேராதீர்கள், ஒத்துழையுங்கள் - சுகாதாரச் செயலர் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “மகாராஷ்ட்ரா, டெல்லி, கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது. கேரள மக்கள்தொகை தமிழக மக்கள்தொகையில் பாதியை கொண்டது. கர்நாடகா நம்மைவிட குறைவான மக்கள் தொகையை கொண்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைகிறது. ஆனாலும், கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்கள் கவலையளிக்கிறது. சாதாரண ஊர்களிலும் கண்காணிக்க வேண்டியுள்ளது.அனுமதிக்கப்பட்ட நேரங்களில்கூட கூட்டம் சேராதீர்கள், ஒத்துழையுங்கள் - சுகாதாரச் செயலர் வேண்டுகோள்

இந்த ஊரடங்கை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஊரடங்கின் இரண்டாம் பாகத்தில்தான் பலன் கிடைக்கும். பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. கும்பலாக இருக்கும் எந்த இடத்தையும் பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். தமிழக அரசு அனுமதித்துள்ள நேரத்தில்கூட, கடைகளில் கும்பலாக இருந்தால் செல்லவேண்டாம்” என்று கூறினார்.  

Tags: Covid19 Tamilnadu lockdown radhakrishnan coronavirus

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு? ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை!

Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு? ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை!

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

டாப் நியூஸ்

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!