Watch video| வீரலூர் கலவரம்: கைதுக்கு பயந்து ஆண்கள் தலைமறைவானதால் சடலத்தை தூக்கிச்சென்ற பெண்கள்
’’மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆண் வாரிசுகள் இல்லாததால் பெண்கள் ஒன்று கூடி சடலத்தை கட்டிலில் சுமந்து வீரளூர் பேருந்து நிலையத்தில் பிணத்தை எடுத்து வந்தனர்’’

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை பிரச்சனை கடந்த 4 நாட்களாக நீடித்து வருகிறது. அருந்ததியின மக்கள் செல்லும் சுடுகாட்டு பாதை புதர் மண்டி இருப்பதாக எனக்கூறி பொது சாலை வழியாக எடுத்துச் செல்ல கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் பரிந்துரையின் பேரில் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் கவிதா அனுமதி வழங்கினார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு பொது சாலையில் அவர்கள் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூடது என்கூறி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ஊர் பொது மக்கள் அருந்ததிய மக்களின் வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு பதட்டம் ஏற்பட்டதால் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன்குமார் ரெட்டி மற்றும் 5 மாவட்டங்களை சேர்ந்த 900 காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அரசுத்தரப்பில் இருந்து இருதரப்பு மக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் அரசின் அழைப்பை அருந்ததியர் சமூக மக்கள் அதனை ஏற்காமல் புறக்கணித்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னரே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கலவரத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் பிரச்சினை விஸ்வரூபம்; போலீஸ் கைது நடவடிக்கையால் ஆண்கள் தலைமறைவாகி உள்ளதால்
— Vinoth (@Vinoth05503970) January 20, 2022
இறந்தவர் உடலை கட்டிலில் சுமந்த பெண்கள் அடுத்தது என்ன நடக்குமோ என்ற அச்சம் மக்களிடையே @imanojprabakar @SRajaJourno @abpnadu pic.twitter.com/D5xK4mWjlS
மேலும் பலரை கைது செய்யபடலாம் என்ற தகவல் பரவியதால் கிராமத்தில் உள்ள ஏராளமான ஆண்கள் தலைமறைவாகினர். இந்நிலையில் வீரளூர் ஊர் கவுண்டர் பொன்னுசாமியின் தாயார் கருப்பாயி (71) என்பவர் அவர்களுடைய நிலத்தில் வேலை செய்த போது திடீரென உயிரிழந்தார். மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கும். சடங்குகள் செய்வதற்கும் மூதாட்டியின் வாரிசுகள் வீட்டில் இல்லாததால் பெண்கள் ஒன்று கூடி சடலத்தை கட்டிலில் சுமந்து கொண்டு வந்து வீரளூர் பேருந்து நிலையத்தில் பிணத்தை எடுத்து வந்தனர். கிராமத்தின் அனைத்து தெருக்களிலும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து உள்ளதால். பிணத்தை சாலையில் வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினரிடம் பெண்கள் ஆவேசத்துடன் கண்ணீர் மல்க கூறியதாவது: ஆண்கள் வீட்டில் இல்லாததால் சடலத்தை எப்படி கொண்டு செல்வது ஆண்கள் இல்லாமல் சடங்குகளை நாங்கள் எப்படி செய்ய முடியும். கலவரம் தொடர்பாக ஒரு தலைபட்சமாக இல்லாமல் நியாயமான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போலீசாருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கைது செய்தவர்களின் விவரங்கள் குறித்து காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சடலத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் 5 ஆவது நாளாக பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் கலசப்பாக்கம் தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

