குட் நியூஸ் மக்களே... ரூ.15 கோடியில் மல்டி ஸ்பெஷலிட்டி ரயில் நிலையம் - எங்கு தெரியுமா ?
சிதம்பரம், விருத்தாசலம் ரயில் நிலையம் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ், ஹைடெக் ரயில் நிலையமாக மாற்றும் நடவடிக்கை .

கடலூர்: சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையம் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ், ஹைடெக் ரயில் நிலையமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிதம்பரம் ரயில் நிலையதிற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலைய பணிகள் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு, துவங்கப்பட்டது. பராமரிப்பின்றியும், பெரிய அளவில், மேம்படுத்தப்படாமல் இருந்த சிதம்பரம் ரயில் நிலையம், அழகு பெரும் வகையிலும், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையிலும், மாநகரங்களில் உள்ளது போல், ஹைடெக் மாடலாக்கும் வகையில், சிதம்பரம் ரயில் நிலைய பணிகள் துவங்கி நடந்து வந்தது. அதன் அடிப்படையில், ரயில் நிலைய நுழைவு வாயில் முகப்பு பிரம்மாண்டமாக மாற்றப்பட்டது.
பிரம்மாண்டமான நுழைவு வாயில்
மழை காலத்தில் வாகனம் மற்றும் ஆட்டோவில் வரும் பயணிகள் நேராக போர்ட்டிகோவிற்கு வந்து இறங்கி உள்ளே செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும் மேற்கூரைகளே இல்லாத 3 நடைமேடைகளிலும், புதிய மேற்கூரை அமைக்கப்பட்டது. தரைகள் அனைத்தும் டைல்ஸ் பதிக்கப்பட்டு, புதிதாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு நடைமேடையிலும், 4 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மாற்று திறனாளிகள் உள்ளே செல்லும் வகையில் சாய்தள பாதை
மேலும் மேம்படுத்தப்பட்ட பயணிகள் ஓய்வறை, கழிவறை, விசாலமாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், புதிய ரயில்வே நழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரயில்வே ஆட்டோ ஸ்டேண்டிற்காக, பஸ் நிலையங்களில் உள்ளதுபோல், ஆட்டோக்களுக்கு இட ஒதுக்கீட்டுடன் ஸ்டேண்ட், ரயில் நிலைய வெளியில், பிளேவர் பிளாக் கற்கள் கொண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள் உள்ளே செல்லும் வகையில், சாய்தள பாதை அமைக்கப்பட்டுள்ளது. தொய்வாக நடந்து வந்த பணிகள், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து வேகம் எடுத்தது.
75 சதவீத பணிகள் நிறைவு
மேலும் பணிகள் குறித்து தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு முடுக்கி விட்டனர். அதனை தொடர்ந்து தற்போது 75 சதவீத பணிகள் முடிந்து, இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், தென் னக ரயில்வே துணை தலைமை பொறியாளர் கட்டிஷக்தி, ரயில்வே பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அதில் மேற்கூரையில் சில இடங்களில் சரியான முறையில் இல்லாததை சுட்டிக்காட்டி, பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.

