TN Rain : நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை...தண்ணீரில் தத்தளிக்கும் விழுப்புரம்...
விழுப்புரத்தில் நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரத்தில் நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த மழையினால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் சூழ்ந்தது. இதனால் பேருந்துகள் தண்ணீரில் மிதந்து செல்லக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாமல் வெளியே நின்று பேருந்து ஏறும் நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்ததி விழுப்புரத்தில் அதிக பட்சமாக 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், இந்திரா நகர் ரயில்வே பாலம், நகராட்சி பள்ளி மைதானம், புதிய பஸ் நிலையம் உட்பட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.விழுப்புரம் மகாராஜபுரம் அடுத்த தாமரைகுளம் பகுதியில் தேங்கிய மழை நீர் அங்குள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்
விழுப்புரம் 220 மி.மீ., (22 செ.மீ.,) கோலியனுார் 72, வளவனுார் 64, கெடார் 90, முண்டியம்பாக்கம் 46, நேமூர் 36, கஞ்சனுார் 38; சூரப்பட்டு 85, வானுார் 51, திண்டிவனம் 127, மரக்காணம் 108, செஞ்சி 142, செம்மேடு 89; வல்லம் 77, அனந்தபுரம் 33, அவலுார்பேட்டை 68, வளத்தி 72, மணம்பூண்டி 28, முகையூர் 105, அரசூர் 16, திருவெண்ணெய்நல்லுார் 30 என மொத்தம் 1,599 மி.மீ., சராசரியாக 76 மி.மீ., மழை பதிவானது.
ஆர்ஞ்சு அலர்ட்:
நாளை, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்.
நாளை மறுநாள் திங்கட்கிழமை, கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவக்ங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு:
TN Rain Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், மற்றும் கோவை ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதிவரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரை, இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 10, 2024