விழுப்புரம் :தொரவி கிராமத்தில் கடைசி நேரத்தில் வாக்களிக்க குவிந்த வாக்காளர்களால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் தொரவி கிராமத்தில் கடைசி நேரத்தில் வாக்களிக்க குவிந்த வாக்காளர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டம் தொரவி கிராமத்தில் கடைசி நேரத்தில் வாக்களிக்க குவிந்த வாக்காளர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெருகிறது, விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாளஅட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் உரிய பாதுகாப்புடன் வந்து வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Vellore: உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராமம்..காரணம் என்ன?
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 6ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதில், 6ம் தேதி இன்று முதல் கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலருக்கு 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு 745 பேரும், 372 கிராம ஊராட்சித் தலைவருக்கு 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8,574 பேரும் என 3,297 பதவியிடங்களுக்கு 10 ஆயிரத்து 873 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான ஓட்டுப்பதிவு 1,569 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது.
Kanyakumari: தொடர் கனமழை...ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி
இந்த நிலையில்,விக்கரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைப்பதற்கு இடப்பற்றாக் குறையால் ஒரே வாக்குச்சாவடியில் இரண்டு பூத்துகள் அமைக்கப்பட்டு வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் வாக்களிக்கும் நேரம் முடியும் தருவாயில் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வாக்குச் சாவடியில் வாக்களிக்க சூழ்ந்தனர் இதனால் இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தொரவி கிராமத்தில் பூத் நம்பர் 6 மற்றும் 7 இவை இரண்டும் ஒரே அறையில் இருப்பதனால் வாக்களிப்பதில் மிக சிரமமாக இருப்பதாகவும் கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா நோய் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் நேரம் நிறைவு செய்தும் அப்பகுதி மக்கள் நாங்கள் வாக்களித்துவிட்டு தான் செல்வோம் என அதிக அளவில் வாக்குச்சாவடி மையத்தில் சூழ்ந்து உள்ளனர். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.